PMK's youtube channel
The PMK Blog
Follow Me on Twitter
வன்னியர் இணைய நண்பர்கள் முக நூல்

பாமகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: புதுச்சேரியில் பாமக போட்டி உறுதி! வேட்பாளராக ஆர்.கே.ஆர் .அனந்தராமன் அறிவிப்பு! | தர்மபுரி தொகுதியில் பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தேசிய ஜனநாயக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்! இன்று (24-03-14)12.00 பெண்ணாகரம்: 2.00 மணி பாலக்கோடு: 3.00 மணி தர்மபுரி நாளை (25-03-14) காலை 10 மணிக்கு அரூர், 12 மணி பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் நடக்கிறது. | புதுச்சேரி தொகுதியில் பாமகவை ஆதரிக்கும் தேமுதிக! | தேசிய பாதுகாப்பு சட்ட கைது ரத்து :வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு உள்ளிட்ட 20 பேருக்கு ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை! | எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் மீது பழிவாங்கும் போக்குடன் தமிழக அரசு மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்திருப்பதன் மூலம் நீதி வென்றுள்ளது- மருத்துவர் அய்யா | உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பி. சதாசிவம் அவர்களுக்கு மருத்துவர் இராமதாசு வாழ்த்து | என்.எல்.சி. பங்கு விற்பனை முடிவை கைவிட வேண்டும்: பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை! | அரிசி, காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை! –மருத்துவர் சின்னைய்யா வலியுறுத்தல்!
  • தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள்

    பாமக அறிவித்துள்ள வேட்பாளர்கள் பட்டியல்[...]

  • பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்[...]

  • யார் காரணம்!

    அதிமுகதான் [...]

  • அ.தி.மு.க இழப்பீடு தருவது எப்போது?

    நடைபெற்றுள்ள வன்முறை செயல்களுக்கு அ.தி.மு.க தான் இழப்பீடு [...]

  • வன்னியர் இளைஞர் கலாச்சார விழா!

    அகிலேஷ்யாதவ் துவங்கிவைக்கிறார் [...]

  • அனைத்து சமுதாய பேரியக்க கூட்டம்

    சென்னையில் வரும் 27 ஆம் தேதி [...]

  • #

    #

மே 21, 2014

தோழர் ஆர். உமாநாத் மறைவுக்கு மருத்துவர் ச. இராமதாசு இரங்கல்

Posted by போராளி On PM 7:39 No comments

இது குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கற் செய்திக்குறிப்பு:-

umana மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், நாட்டின் விடுதலைக்காக போராடியவருமான தோழர் ஆர். உமாநாத் காலமானார் என்பதை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும்,  வேதனையும், துயரமும் அடைந்தேன்.

உடல் நலக்குறைவால் திருச்சி மருத்துவமனையில் உமாநாத் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தி சில நாட்களுக்கு முன் கிடைத்த நிலையில், அவர் விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று விரும்பினேன்.  ஆனால், அதற்கு மாறாக அவர் மறைந்துவிட்டதாக வெளியான செய்தியை தாங்க முடியவில்லை.

நாடாளுமன்றத்திற்கும், சட்டப்பேரவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட உமாநாத் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தவர். மனித நாகரீகத்துக்கு எதிரான மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர். தொழிற்சங்க முன்னோடிகளில் ஒருவர் என்ற வகையில் தொழிலாளர்களின் நலன்களுக்காக போராடியவர்.

தோழர் உமாநாத்தின் மறைவு பொதுவுடைமை இயக்கத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நெய்வேலி மின்நிலைய விபத்தில் உயிரிழந்த மேலாளருக்கு மருத்துவர் இராமதாசு இரங்கல்

Posted by போராளி On PM 7:29 No comments

இது குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

selvrajdt

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் முதல் அனல் மின் நிலையத்தில்  இன்று காலை  கொதிகலன் குழாய் அதிக அழுத்தம் காரணமாக வெடித்து சிதறியதில் அங்கு பணியாற்றிய முதன்மை மேலாளர் செல்வராஜ் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ர்சியும், துயரமும், வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்தில் அனல்மின் நிலைய பணியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, அபிஷேக், ஜோதி, பலராமன், ஒப்பந்தக்காரர் சிவலிங்கம் உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்தனர் என்ற செய்தியும் அதிர்ச்சியளித்தது. கொதிகலன் குழாய் வெடித்த வேகத்தில் மின்நிலையத்தின் ஒரு கட்டிடம் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. இந்த விபத்துக்கு பராமரிப்புப் பணிகளில் அலட்சியம் காட்டப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது. விபத்து நடந்த 50 மெகாவாட் திறன் கொண்ட மின்னுற்பத்திப் பிரிவு 1962 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டதாகும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவரும் அந்த மின் உற்பத்திப் பிரிவின் ஆயுள் காலம் கடந்த 2012 ஆண்டே முடிவடைந்து விட்டது. அதற்குப் பிறகும் அந்த மின்னுற்பத்தி நிலையத்தைக் கைவிடாமல் தொடர்ந்து இயக்கி வந்ததன் விளைவாகவே இந்த விபத்து நடந்திருக்கிறது. இந்த விபத்துக்கு என்.எல்.சி. நிர்வாகம் தான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்.  இந்த விபத்துக் குறித்து தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டு விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

நிர்வாகத்தின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டு மேலாளர் உயிரிழந்திருப்பதும், அப்பாவி ஊழியர்கள் படுகாயமடைந்திருப்பதும் மிகுந்த வருத்தமளிக்கிறது. விபத்தில் காயமடைந்த பணியாளர்களுக்கு தரமான மருத்துவம் அளிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் அனைவரும் விரைவாக நலம் பெற என் விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்தில் உயிரிழந்த மேலாளரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின்  அனைத்து சுரங்கங்கள் மற்றும் மின் நிலையங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான  நடவடிக்கைகளை  என்.எல்.சி. நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

மே 18, 2014

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்: தேர்தல் ஆணையம் வெளியீடு

Posted by போராளி On PM 11:03 1 comment

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளை, இந்திய தேர்தல் ஆணையம்  அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Partywise-Trends-Result 2014-05-17 14-09-46

Partywise-Trends-Result 2014-05-17 14-10-00  
கட்சிகள் பெற்ற வாக்குகளும், அதன் சதவீதமும் (அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-

அ.தி.மு.க. - 1,79,83,168 (44.3 சதவீதம்)
தி.மு.க. - 95,75,850 (23.6)
பா.ஜனதா - 22,22,090 (5.5)
தே.மு.தி.க. - 20,79,392 (5.1)
பா.ம.க. - 18,04,812 (4.4)
காங்கிரஸ் - 17,51,123 (4.3)
ம.தி.மு.க. - 14,17,535 (3.5)
சுயேச்சைகள் - 8,66,509 (2.1)
விடுதலை சிறுத்தைகள் - 6,06,110 (1.5)
புதிய தமிழகம் - 2,62,812 (0.6)
மனிதநேய மக்கள் கட்சி - 2,36,679 (0.6)
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 2,05,896 (0.5)
ஆம் ஆத்மி - 2,03,175 (0.5)
இந்திய கம்யூ. - 2,19,866 (0.5)
மார்க்சிஸ்ட் கம்யூ. - 2,20,614 (0.5)
பகுஜன் சமாஜ் - 1,55,964 (0.4)
நோட்டா (யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள்) 5,82,062 (1.4)

பா.ம.க தேர்தல் முடிவுகள்

Posted by போராளி On PM 10:58 No comments

47 ஆண்டுகால நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் திமுக, அதிமுக கூட்டணியோ ஆதரவோ இல்லாமல் இதுவரை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. 47 ஆண்டுகாலத்திற்கு பின் முதல் முறையாக தமிழகத்தில் திமுக ஆதரவின்றியும், அதிமுக ஆதரவின்றியும்  பாமகவின் டாக்டர் அன்புமணி ராமதாசும் ,பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணனும்,நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் திமுக இல்லையென்றால் அதிமுக என்ற நிலை தான் இருந்தது, திமுக ஒரு தொகுதி கூட வெல்ல முடியாத நிலையில் பாஜக, பாமக, தேமுதிக, மதிமுக அணிகள் இணைந்த மூன்றாவது அணி தோல்வி அடைந்திருந்தாலும் இரண்டு இடங்களை வென்றுள்ளது, மேலும் பல இடங்களில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சில இடங்களில் மூன்றாவது இடத்தையும் கன்னியாகுமரி மற்றும் பாண்டிச்சேரியில் திமுக நான்காவது இடத்தையும் பெற்றுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் மக்கள் வாக்களிக்கும் மனநிலையில் சில வேறுபாடுகள் உள்ளதால் மூன்றாவது அணியாக இருந்த பாஜக, பாமக, தேமுதிக, மதிமுக அணிகள் இணைந்து மீண்டும் 2016 சட்டமன்ற தேர்தலை சந்தித்தால் தமிழகத்தில் குறிப்பிட்ட அளவு தொகுதிகளை வென்று தமிழக தேர்தல் களத்தை மும்முனைப்போட்டியாக மாற்றலாம்

பா.ம.க பெற்ற வாக்குகள் தொகுதி வாரியாக:

  dharmapuri
  krishnakiri
  arani
  Arakonam
  chidambaram
tiruvannamalai
  tiruvannamalai
  nagai
  வாக்குசதவீதம்:

Partywise-Trends-Result 2014-05-17 14-09-46

Partywise-Trends-Result 2014-05-17 14-10-00

பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்குடன் மருத்துவர் அன்புமணி இராமதாசு சந்திப்பு

Posted by போராளி On PM 10:09 1 comment

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கை பா.ம.க. இளைஞரணித தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு தில்லியில் இன்று இரவு சந்தித்து பேசினார்.

7

பா.ம.க.வுக்கு வெற்றி தேடி தந்த தருமபுரி வாக்காளர்களுக்கு நன்றி! – மருத்துவர் அய்யா.

Posted by போராளி On PM 10:04 No comments

இது குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

anbu

தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு 77 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். பா.ம.க. போட்டியிட்ட மற்ற தொகுதிகளின் முடிவுகள் மன நிறைவளிக்கும் வகையில் இல்லாவிட்டாலும், தருமபுரி தொகுதி முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது.

மக்களவைத் தேர்தலின்போது தமிழகத்தின் மற்ற தொகுதிகளில் பணம் ஆறாக ஓடியது என்றால், தருமபுரியில் மட்டும் வெள்ளமாக பாய்ந்தது. மருத்துவர் அன்புமணி இராமதாசு வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதையே முக்கிய இலக்காக கொண்டு செயலாற்றிய ஆளுங்கட்சியினர்  அதற்காக எந்தளவுக்கு விதிகளை மீறி செயல்பட முடியுமோ, அந்த அளவுக்கு விதிகளை மீறினார்கள். ஓட்டுக்குப் பணம் , அரசு எந்திரத்தின் தவறான பயன்பாடு, பாட்டாளி மக்கள் கட்சியினரை பணி செய்யவிடாமல் தடுத்தது என எத்தனையோ வழிகளில் பா.ம.க.வின் வெற்றிக்கு அணை போட அ.தி.மு.க முயன்றாலும், அவை அனைத்தையும் முறியடித்து அன்புமணி இராமதாசுவை  வெற்றி பெறச் செய்த தருமபுரி தொகுதி வாக்காளர்களுக்கு எந்த வகையில் நன்றிக்கடன் செலுத்துவது என்றே தெரியவில்லை.

கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே தருமபுரி தொகுதி மக்கள் பா.ம.க.வுக்கு ஆதரவாகவே இருந்து வந்திருக்கிறார்கள். தருமபுரி மக்களையும், பா.ம.க.வையும் ஒருபோதும் பிரிக்க முடியாது என்பதும், தருமபுரி தொகுதி பா.ம.க.வின் இரும்புக் கோட்டை என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் பின்தங்கியிருக்கும் தருமபுரி மாவட்டத்தை தமிழகத்தின் முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என்று தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றி,  பா.ம.க மீது தருமபுரி மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம்; நன்றிக்கடன் செலுத்துவோம் என்று கூறி தருமபுரி தொகுதி வாக்காளர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கிருஷ்ணகிரி, சிதம்பரம், ஆரணி, அரக்கோணம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி ஆகிய தொகுதிகளிலும் பா.ம.க.வுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், அவர்களின் நம்பிக்கையை முழுமையாக பெறும் வகையில், இனிவரும் காலங்களில் பாட்டாளி மக்கள் கட்சி பணியாற்றும் என்றும் வாக்குறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

மே 17, 2014

நரேந்திர மோடி அவர்களுக்கு மருத்துவர் ச. இராமதாசு வாழ்த்து

Posted by போராளி On AM 8:52 No comments

nr மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றிருப்பதையடுத்து அக்கட்சியின் சார்பில் பிரதமராக பதவியேற்கவிருக்கும் மான்புமிகு. நரேந்திர மோடி அவர்களுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அய்யா அவர்களின் வாழ்த்துச்செய்தி:

 

 

பெறுநர்.

மாண்புமிகு. நரேந்திர மோடி அவர்கள்,
இந்தியாவின் 15ஆவது பிரதமர்,
காந்திநகர், குஜராத்.

அன்பிற்குரிய மோடி அவர்களுக்கு, வணக்கம்!

இந்தியாவில் நடைபெற்ற 16 ஆவது மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றமைக்காக நான் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி இந்தியாவின் 15 ஆவது பிரதமராக பதவியேற்க இருப்பதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 30 ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்குக் காரணமான இந்த மிகப்பெரிய வெற்றியை கட்டி எழுப்பியவர் நீங்கள் தான்.

குஜராத் மாநிலத்தில் எட்டப்பட்டது போன்ற வளர்ச்சி தான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பயனளிக்கும் என்பதை இந்திய மக்கள் நன்றாக உணர்ந்திருப்பதால், உங்களிடமிருந்து அவர்கள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்.

தமிழகத்தில் நமது கூட்டணி எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்ற போதிலும் இரு தொகுதிகளில் நாம் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் நமது கூட்டணியின் எதிர்காலத்திற்கு இது வகை செய்யும். தமிழகத்தின் நலன் தொடர்பான மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்குறுதிகளையும் தாங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு,

(கையொப்பம்)

மருத்துவர் ச. இராமதாசு

-------------------------------------------------------------------- In English ---------------------------------------------------------------------

To

Honble. Narendra Modi,

Prime Minister Designate,

Gandhi Nagar, Gujarat.

Dear Modi, Vanakkam!

My heartiest congratulations to you on the unprecendented victory National Democratic Alliance has tasted in the 16th Lok Sabha election of the country. I also express my best wishes as you are going to become the 15th Prime Minister of the country. You are the architect of this victory that has secured majority for a Political Party after a gap of 3 decades.

The entire nation expect a lot from you, as they already aware Gujarat model development will benefit the entire country.

Though, in Tamilnadu We are not able to win as we had ecpected, We are going to win 2 seats. It will augur well for the future. I strongly believe that you will fulfill the expectations of the people of the State and the poll promises made by our alliance.

Yours,

( Dr. S. Ramadoss)