PMK's youtube channel
The PMK Blog
Follow Me on Twitter
வன்னியர் இணைய நண்பர்கள் முக நூல்

பாமகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: புதுச்சேரியில் பாமக போட்டி உறுதி! வேட்பாளராக ஆர்.கே.ஆர் .அனந்தராமன் அறிவிப்பு! | தர்மபுரி தொகுதியில் பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தேசிய ஜனநாயக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்! இன்று (24-03-14)12.00 பெண்ணாகரம்: 2.00 மணி பாலக்கோடு: 3.00 மணி தர்மபுரி நாளை (25-03-14) காலை 10 மணிக்கு அரூர், 12 மணி பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் நடக்கிறது. | புதுச்சேரி தொகுதியில் பாமகவை ஆதரிக்கும் தேமுதிக! | தேசிய பாதுகாப்பு சட்ட கைது ரத்து :வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு உள்ளிட்ட 20 பேருக்கு ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை! | எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் மீது பழிவாங்கும் போக்குடன் தமிழக அரசு மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்திருப்பதன் மூலம் நீதி வென்றுள்ளது- மருத்துவர் அய்யா | உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பி. சதாசிவம் அவர்களுக்கு மருத்துவர் இராமதாசு வாழ்த்து | என்.எல்.சி. பங்கு விற்பனை முடிவை கைவிட வேண்டும்: பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை! | அரிசி, காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை! –மருத்துவர் சின்னைய்யா வலியுறுத்தல்!

பிப்ரவரி 23, 2011

தேர்தல் நடத்தை விதிமுறைகள்

Posted by போராளி On பிற்பகல் 4:12 No comments


தேர்தல் நன்னடத்தை விதிகளில் முக்கியமானவை வருமாறு;

1.    எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி உள்பட எந்த நிதியையும் நலத்திட்டங்கள் மற்றும் பணிகளுக்கு ஒதுக்கக் கூடாது. காண்டிராக்ட் விடக்கூடாது.

2.     முடியும் தருவாயில் உள்ள திட்டங்களை நிறுத்தவோ தாமதப்படுத்தவோ தேவையில்லை. ஆனால் இதை அதிகாரிகள்தான் துவக்கி வைக்க வேண்டும். அரசியல் கட்சியினரை கொண்டு நடத்த கூடாது.

3.     செயல்பாட்டில் இருந்தாலும் நலத்திட்டங்களை அமைச்சர்கள் ஆய்வு செய்தல் கூடாது.

4.    பணி ஆணை வழங்கப்பட்டிருந்தாலும், பணி துவங்கப்படாத நிலையில் எந்த பணியையும் துவக்கக் கூடாது.

5.      பல்வேறு வகையான புதிய பணிகளை நிபந்தனை களுக்கு உட்பட்டு தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரி வித்து விட்டு மேற்கொள்ளலாம்.

6.      அரசு தரப்பில் எந்தவித புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏதும், தேர்தல் கமிஷனின் முன் அனுமதி பெறாமல் மேற்கொள்ளக் கூடாது.

7.    அரசு மற்றும் பொதுத் துறைகளில் எந்தவித நியமனங்களோ, பதவி உயர்வோ வழங்க கூடாது.

8.    அமைச்சர்களும், அதிகாரிகளும் ஆளும் கட்சிக்கு சாதகமாக வாக்காளர்களை தூண்டும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது.

9.     ஏதேனும் ஒரு வகையில் மானியங்களை அறிவிக்கவோ, அது தொடர்பாக வாக்குறுதிகள் கொடுக்கவோ கூடாது.

10.    மக்களுக்கான திட்டங்கள், செயல் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டக் கூடாது.

11.   சாலைகள் அமைப்பது, குடிநீர் வசதிகள் செய்து தருவது போன்றவற்றை பற்றி வாக்குறுதி கொடுக்க கூடாது.

12.  மத்திய மாநில அமைச்சர்கள், வாக்குச்சாவடிக்குள் அல்லது வாக்குச் சீட்டு எண்ணும் இடத்திற்குள் நுழையக் கூடாது. வேட்பாளர், அனுமதி பெற்ற தேர்தல் ஏஜெண்டு என்ற முறையில்தான் அவ்வாறு நுழையலாம். வாக்காளர் என்ற முறையில் குறிப்பிட்ட வாக்கு சாவடிக்குள் செல்லலாம்.

13.   ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்கிற ஒரு கட்சி அல்லது வேட்பாளர் ஊர்வலம் தொடங்கும் காலம், இடம், வழித்தடம், முடியும் நேரம் ஆகியவற்றை முன்னதாகவே முடிவு செய்ய வேண்டும். திடீரென முடிவை மாற்றக் கூடாது.

14.    போலீசாரின் கட்டளை களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
 
15.  அரசியல் தலைவர் களின் கொடும்பாவியை இழுத்து செல்வதோ கொடும்பாவி எரிப்பதோ கூடாது.

16.   தேர்தல் பொதுக்கூட்டம் நடத்த மைதானங்களை தனி உரிமையுடன் ஆளும் கட்சியே பயன்படுத்த கூடாது. மற்ற கட்சி, வேட்பாளர்களும் அதே போல் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

17.  தேர்தல் ஆணையக்குழு தேர்தல் தேதி வெளியிட்ட நாளில் இருந்து அமைச்சர்களும், பிற அதிகாரிகளும் அவர்களுடைய விருப்ப நிதியில் இருந்து மானியமோ, தொகையோ வழங்க கூடாது.

18.   சாலைகள் அமைப்பது, குடிநீர் வசதி செய்து தருவது போன்ற வாக்குறுதி கொடுக்க கூடாது.
1
எந்த அரசியல் கட்சியோ, வேட்பாளரோ ஜாதி, மதம் அல்லது
பல்வேறுமொழி பேசுபவர்களிடையே வெறுப்பைத்
தூண்டும் வகையில் அல்லது
வேறுபாட்டை, பகைமையை வளர்க்கும், தூண்டும் வகையிலான பிரசாரத்தில்ஈடுபடக் கூடாது.


2
தலைவர்களின் பொது வாழ்க்கை அல்லது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து
பிரசாரம் செய்யக்
கூடாது.


3
கோயில், மசூதி, சர்ச் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் பிரசாரம்
செய்யக் கூடாது.


4
வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர்
அதிக பட்சமாக
3 கார்களை மட்டும் உபயோகப்படுத்த வேண்டும்.


5

மனு தாக்கல் செய்யும் போது மொத்தம் 5 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.


6

வேட்புமனு பரிசீலனையின் போது மொத்தம் 4 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.7

தேர்தல் பணிக்கு வேட்பாளர் பயன்படுத்தும் வாகனத்திற்கு தேர்தல்
அலுவலரிடம்முன் அனுமதி பெற
வேண்டும். அந்த ஒரிஜினல்
நகலை வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்ட
வேண்டும்.


8

கல்வி நிலையங்களையோ, அங்குள்ள விளையாட்டு மைதானங்களையோ
பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது.


9

பிரசாரத்திற்கு பயன்படுத்தும் வாகனத்தில் வெளிப்புற மாற்றங்களோ,  ஒலிபெருக்கி பொருத்துவதாக இருந்தால் அனுமதி பெற
வேண்டும்.


10

பொது கட்டிடங்களில் தேர்தல் குறித்த சுவரொட்டி ஒட்டுவதோ, விளம்பரங்கள் எழுதுவதோ கூடாது.


11

தனியார் கட்டிடங்களில் உரிமையாளரிடம் எழுத்து மூலமாக
அனுமதி பெற
வேண்டும்.


12

அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடாமல்தேர்தல்தொடர்பான
துண்டு பிரசுரம்
, நோட்டீஸ் எதையும் அச்சடிக்ககூடாது.


13

வேட்பாளர் சார்பில் வாக்காளர்களுக்கு புடவை, சட்டை போன்ற
உடைகளை
வழங்கக்கூடாது.


14

தேர்தல் பிரசாரம் முடிந்து வாக்குப்பதிவு முடிவடையும் வரை
வேட்பாளர் சம்பந்தப்பட்ட
விபரங்களை வாக்காளர்களுக்கு திரைப்படம், வீடியோ மூலம் திரையிடக்கூடாது.


15

வேட்பாளர் தனது படம் அச்சடிக்கப்பட்ட டைரி, காலண்டர், ஸ்டிக்கர்களை வாக்காளர்களுக்கு வழங்கக்கூடாது.


16

தேர்தல் நேரத்தில் கட்சிகள் தற்காலிக அலுவலகங்களை அமைக்கலாம்.


17

ஆனால் தனியார் மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமிக்கக் கூடாது.மத
வழிபாட்டு தலங்கள்
மற்றும் அதனை ஒட்டி அமைக்கக்கூடாது.
வாக்குச்சாவடி எல்லையிலிருந்து
200 மீட்டர் சுற்றளவிற்கு அமைக்கக்கூடாது.18

வாக்கு பதிவு நேரம் முடிவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு தேர்தல்
பிரசாரம் முடிந்ததும்
, வேட்பாளர் மற்றும் அவரது ஏஜென்ட் தவிர, பிரசாரத்தில் ஈடுபட்ட அனைவரும் தொகுதியை விட்டு வெளியேற
வேண்டும்.19

இந்த கட்டுப்பாடு அரசியல் கட்சியில் தேர்தல் பணி செய்ய நியமிக்கப்பட்டு இருக்கும், பொறுப்பு அலுவலர்களுக்கு
பொருந்தாது.20

தேர்தல் பொதுக்கூட்டங்கள் நடத்த, ஊர்வலங்கள் செல்ல, ஒலிபெருக்கி
அமைக்க
போலீசாரிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும்.

21

பொதுக்கூட்டங்கள், ஒலிபெருக்கிகளை இரவு 10 மணிக்கு பிறகும், அதிகாலை 6 மணிக்கு முன்பும் பயன்படுத்தக்கூடாது.

22

வாக்குப்பதிவு முடியும் நேரத்திற்கு 48 மணிக்கு முன்பு பொதுக்கூட்டங்கள்
மற்றும் ஊர்வலங்கள் நடத்த தடை
செய்யப்பட்டுள்ளது.

23

பூத் சிலிப்பில்வேட்பாளரின்  பெயர், படம் இருக்கக்க கூடாது

24

வாக்குச் சாவடிகளில் ஏஜென்டுகளாக நியமிக்கப்படுபவர்கள் அந்த வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியில் வாக்காளராக இருத்தல் வேண்டும். இருப்பினும் பெண்களுக்காக இயங்கும் வாக்குச்சாவடிகளுக்கு இந்த விதி பொருந்தாது


25

வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டர் தள்ளி கட்சிகள் பூத் அமைக்கலாம். ஒரு டேபிள், 2 நாற்காலிகள், ஒரு குடை அல்லது தார்பாலின் போன்றவை மட்டும் அனுமதிக்கப்படும். இதற்கு எழுத்து மூலம் அனுமதி பெற வேண்டும்26

வாக்குச்சாவடியில் தலைமை அலுவலர், பார்வையாளர் மற்றும் மைக்ரோ அப்சர்வர், பாதுகாப்பு அலுவலர் தவிர மற்றவர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது.
27

வாக்குச்சாவடிக்கு அருகில், ஆயுதங்களுடன் போகக்கூடாது. வேட்பாளருக்கு அனுமதிக்கப்பட்ட வாகனத்தை வேறு நபர் பயன்படுத்தக் கூடாது. வாக்குப்பதிவு அன்று வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கோ அல்லது வாக்குச் சாவடியிலிருந்து வசிப்பிடங்களுக்கோ வாகனங்கள் மூலம் அழைத்து செல்லக்கூடாது