PMK's youtube channel
The PMK Blog
Follow Me on Twitter
வன்னியர் இணைய நண்பர்கள் முக நூல்

பாமகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: புதுச்சேரியில் பாமக போட்டி உறுதி! வேட்பாளராக ஆர்.கே.ஆர் .அனந்தராமன் அறிவிப்பு! | தர்மபுரி தொகுதியில் பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தேசிய ஜனநாயக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்! இன்று (24-03-14)12.00 பெண்ணாகரம்: 2.00 மணி பாலக்கோடு: 3.00 மணி தர்மபுரி நாளை (25-03-14) காலை 10 மணிக்கு அரூர், 12 மணி பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் நடக்கிறது. | புதுச்சேரி தொகுதியில் பாமகவை ஆதரிக்கும் தேமுதிக! | தேசிய பாதுகாப்பு சட்ட கைது ரத்து :வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு உள்ளிட்ட 20 பேருக்கு ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை! | எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் மீது பழிவாங்கும் போக்குடன் தமிழக அரசு மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்திருப்பதன் மூலம் நீதி வென்றுள்ளது- மருத்துவர் அய்யா | உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பி. சதாசிவம் அவர்களுக்கு மருத்துவர் இராமதாசு வாழ்த்து | என்.எல்.சி. பங்கு விற்பனை முடிவை கைவிட வேண்டும்: பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை! | அரிசி, காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை! –மருத்துவர் சின்னைய்யா வலியுறுத்தல்!

மே 21, 2014

நெய்வேலி மின்நிலைய விபத்தில் உயிரிழந்த மேலாளருக்கு மருத்துவர் இராமதாசு இரங்கல்

Posted by போராளி On PM 7:29 No comments

இது குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

selvrajdt

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் முதல் அனல் மின் நிலையத்தில்  இன்று காலை  கொதிகலன் குழாய் அதிக அழுத்தம் காரணமாக வெடித்து சிதறியதில் அங்கு பணியாற்றிய முதன்மை மேலாளர் செல்வராஜ் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ர்சியும், துயரமும், வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்தில் அனல்மின் நிலைய பணியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, அபிஷேக், ஜோதி, பலராமன், ஒப்பந்தக்காரர் சிவலிங்கம் உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்தனர் என்ற செய்தியும் அதிர்ச்சியளித்தது. கொதிகலன் குழாய் வெடித்த வேகத்தில் மின்நிலையத்தின் ஒரு கட்டிடம் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. இந்த விபத்துக்கு பராமரிப்புப் பணிகளில் அலட்சியம் காட்டப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது. விபத்து நடந்த 50 மெகாவாட் திறன் கொண்ட மின்னுற்பத்திப் பிரிவு 1962 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டதாகும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவரும் அந்த மின் உற்பத்திப் பிரிவின் ஆயுள் காலம் கடந்த 2012 ஆண்டே முடிவடைந்து விட்டது. அதற்குப் பிறகும் அந்த மின்னுற்பத்தி நிலையத்தைக் கைவிடாமல் தொடர்ந்து இயக்கி வந்ததன் விளைவாகவே இந்த விபத்து நடந்திருக்கிறது. இந்த விபத்துக்கு என்.எல்.சி. நிர்வாகம் தான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்.  இந்த விபத்துக் குறித்து தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டு விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

நிர்வாகத்தின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டு மேலாளர் உயிரிழந்திருப்பதும், அப்பாவி ஊழியர்கள் படுகாயமடைந்திருப்பதும் மிகுந்த வருத்தமளிக்கிறது. விபத்தில் காயமடைந்த பணியாளர்களுக்கு தரமான மருத்துவம் அளிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் அனைவரும் விரைவாக நலம் பெற என் விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்தில் உயிரிழந்த மேலாளரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின்  அனைத்து சுரங்கங்கள் மற்றும் மின் நிலையங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான  நடவடிக்கைகளை  என்.எல்.சி. நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.