PMK's youtube channel
The PMK Blog
Follow Me on Twitter
வன்னியர் இணைய நண்பர்கள் முக நூல்

பாமகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: புதுச்சேரியில் பாமக போட்டி உறுதி! வேட்பாளராக ஆர்.கே.ஆர் .அனந்தராமன் அறிவிப்பு! | தர்மபுரி தொகுதியில் பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தேசிய ஜனநாயக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்! இன்று (24-03-14)12.00 பெண்ணாகரம்: 2.00 மணி பாலக்கோடு: 3.00 மணி தர்மபுரி நாளை (25-03-14) காலை 10 மணிக்கு அரூர், 12 மணி பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் நடக்கிறது. | புதுச்சேரி தொகுதியில் பாமகவை ஆதரிக்கும் தேமுதிக! | தேசிய பாதுகாப்பு சட்ட கைது ரத்து :வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு உள்ளிட்ட 20 பேருக்கு ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை! | எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் மீது பழிவாங்கும் போக்குடன் தமிழக அரசு மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்திருப்பதன் மூலம் நீதி வென்றுள்ளது- மருத்துவர் அய்யா | உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பி. சதாசிவம் அவர்களுக்கு மருத்துவர் இராமதாசு வாழ்த்து | என்.எல்.சி. பங்கு விற்பனை முடிவை கைவிட வேண்டும்: பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை! | அரிசி, காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை! –மருத்துவர் சின்னைய்யா வலியுறுத்தல்!

மே 21, 2014

தோழர் ஆர். உமாநாத் மறைவுக்கு மருத்துவர் ச. இராமதாசு இரங்கல்

Posted by போராளி On PM 7:39 No comments

இது குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கற் செய்திக்குறிப்பு:-

umana மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், நாட்டின் விடுதலைக்காக போராடியவருமான தோழர் ஆர். உமாநாத் காலமானார் என்பதை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும்,  வேதனையும், துயரமும் அடைந்தேன்.

உடல் நலக்குறைவால் திருச்சி மருத்துவமனையில் உமாநாத் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தி சில நாட்களுக்கு முன் கிடைத்த நிலையில், அவர் விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று விரும்பினேன்.  ஆனால், அதற்கு மாறாக அவர் மறைந்துவிட்டதாக வெளியான செய்தியை தாங்க முடியவில்லை.

நாடாளுமன்றத்திற்கும், சட்டப்பேரவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட உமாநாத் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தவர். மனித நாகரீகத்துக்கு எதிரான மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர். தொழிற்சங்க முன்னோடிகளில் ஒருவர் என்ற வகையில் தொழிலாளர்களின் நலன்களுக்காக போராடியவர்.

தோழர் உமாநாத்தின் மறைவு பொதுவுடைமை இயக்கத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.