PMK's youtube channel
The PMK Blog
Follow Me on Twitter
வன்னியர் இணைய நண்பர்கள் முக நூல்

பாமகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: புதுச்சேரியில் பாமக போட்டி உறுதி! வேட்பாளராக ஆர்.கே.ஆர் .அனந்தராமன் அறிவிப்பு! | தர்மபுரி தொகுதியில் பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தேசிய ஜனநாயக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்! இன்று (24-03-14)12.00 பெண்ணாகரம்: 2.00 மணி பாலக்கோடு: 3.00 மணி தர்மபுரி நாளை (25-03-14) காலை 10 மணிக்கு அரூர், 12 மணி பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் நடக்கிறது. | புதுச்சேரி தொகுதியில் பாமகவை ஆதரிக்கும் தேமுதிக! | தேசிய பாதுகாப்பு சட்ட கைது ரத்து :வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு உள்ளிட்ட 20 பேருக்கு ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை! | எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் மீது பழிவாங்கும் போக்குடன் தமிழக அரசு மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்திருப்பதன் மூலம் நீதி வென்றுள்ளது- மருத்துவர் அய்யா | உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பி. சதாசிவம் அவர்களுக்கு மருத்துவர் இராமதாசு வாழ்த்து | என்.எல்.சி. பங்கு விற்பனை முடிவை கைவிட வேண்டும்: பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை! | அரிசி, காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை! –மருத்துவர் சின்னைய்யா வலியுறுத்தல்!

மே 08, 2014

தொடரும் இனப் படுகொலை: இனியும் இந்தியா வேடிக்கை பார்க்கக் கூடாது - மருத்துவர் இராமதாசு அறிக்கை

Posted by போராளி On 11:59 PM 1 comment

இது குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் மே-7 அன்று வெளியிட்ட அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

Inter

இலங்கையில் இராணுவத்தினரின் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல், அகதிகளாக தப்பி வந்த 10 ஈழத் தமிழர்களை தமிழக காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தஞ்சம் தேடி வந்தவர்களை காவல்துறை இரக்கமின்றி கைது செய்து சிறை வைத்திருப்பது ஒருபுறம் வருத்தமளிக்கும் நிலையில், இன்னொரு புறம் அவர்கள் தெரிவித்துள்ள தகவல்கள் மிகுந்த வேதனை தருகின்றன.

வடக்கு மாநிலத்தில் லட்சக்கணக்கில் குவிக்கப்பட்டிருக்கும் சிங்கள இராணுவத்தினர் ஈழத் தமிழர்களை நிம்மதியாக வாழ விடாமல் கொடுமைப்படுத்தி வருகின்றனர். இலங்கையில் மீண்டும் விடுதலைப் போர் வெடித்துவிடுமோ என்ற அச்சத்தில் அப்பாவி தமிழ் இளைஞர்களை ராணுவத்தினர் கடத்திச் சென்று சுட்டுக் கொல்வதாக அங்கிருந்து தப்பி வந்த அகதிகள் கூறியிருப்பது இதயத்தில் ஈட்டி பாய்வதைப் போல உள்ளது. மேலும், தமிழ் பெண்களுக்கு பாலியல் கொடுமை உட்பட பல்வேறு கொடுமைகள் இழைக்கப்படுவதாகவும், பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளை வெளிப்படையாக கூற இயலாது என்றும் இலங்கையிலிருந்து வந்த பெண்கள் கூறியிருப்பதைக் கேட்கும்போது ஈழத்தமிழர்களின் துயரம் இப்போதைக்கு தீராதா? என்ற ஏக்கமும், வேதனையும் தான் ஏற்படுகின்றன.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த போரில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை சிங்களப் படையினர் கொடூரமான முறையில் படுகொலை செய்தனர். இது தொடர்பாக சர்வதேச போர்க்குற்ற மற்றும் இனப்படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் தலைமையிலான குழுவின் விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருக்கிறது. ஆனால், இதற்கு ஒத்துழைக்க மறுக்கும் இலங்கை அரசு மீண்டும் தமிழ் இளைஞர்களை தேடிப் பிடித்து சுட்டுக் கொல்லத் தொடங்கியிருக்கிறது. இனவெறி பிடித்த இலங்கை அரசு அதன் குணத்தை இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பான உலகத்தின் கண்டனங்களையெல்லாம் கண்டுகொள்ளாத இலங்கை அரசு, அந்த நாட்டில் மீதமுள்ள தமிழர்களையும்  கொன்றொழித்துவிட்டு முழுமையான சிங்கள தேசத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.

இவ்வளவுக்கு பிறகும் இலங்கையிடம் மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பது எவ்வகையிலும் பயனளிக்காது. இனப்படுகொலை முடிந்து 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், உலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களிலிருந்து இலங்கையை பாதுகாத்ததுடன், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இந்தியா பாதுகாத்து வருகிறது. அதன்விளைவாகத் தான் தங்களைத் தட்டிக் கேட்க ஆளில்லை என்ற துணிச்சலில் சிங்கள ஆட்சியாளர்கள் மீண்டும் இனப்படுகொலையை  தொடங்கியுள்ளனர். இதைத் தடுக்காவிட்டால் இலங்கையில் தமிழினம் முற்றாக அழிக்கப்பட்டுவிடும்.

எனவே, இலங்கை தொடர்பான அணுகுமுறையை மாற்றிக் கொண்டு, அங்கு தமிழர்கள் கொல்லப் படுவதையும், கொடுமைப்படுத்தப்படுவதையும் தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கை மீது போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை விசாரணை நடத்தவும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யவும் இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதேபோல், தஞ்சம் தேடி வந்த ஈழத் தமிழர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் தவறான அணுகுமுறையை தமிழக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகும் ஈழத்தமிழர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு காவல் மற்றும் விசாரணையில் வைக்கப்பட்டு, அதன்பின் அந்நாட்டு குடிமக்களுக்கு இணையான சலுகைகளுடன் வாழ அனுமதிக்கப் படுகிறார்கள். ஆனால், ஈழத்தமிழ் அகதிகளுக்கு வாழ்வளிக்க வேண்டிய கடமை கொண்ட தமிழக அரசு தஞ்சம் தேடி வருபவர்களை கைது செய்வது சரியல்ல. இத்தகைய அணுகுமுறையை கைவிட்டு  ஆஸ்திரேலியாவில் வழங்கப்படுவது போன்ற சலுகைகளை தமிழ் அகதிகளுக்கு இந்தியா வழங்க வேண்டும். மேலும், கைது செய்யப்பட்ட அகதிகளில் 5 பேர் குழந்தைகள் என்பதாலும், அவர்களால்  எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பதாலும் அவர்கள் 10 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

1 comments:

How to Make Money With Money Online - Work-Tomakemoney
A free money casino games งานออนไลน์ tutorial on how to make money online. I think there are some pretty nice online casino games out there right now