PMK's youtube channel
The PMK Blog
Follow Me on Twitter
வன்னியர் இணைய நண்பர்கள் முக நூல்

பாமகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: புதுச்சேரியில் பாமக போட்டி உறுதி! வேட்பாளராக ஆர்.கே.ஆர் .அனந்தராமன் அறிவிப்பு! | தர்மபுரி தொகுதியில் பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தேசிய ஜனநாயக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்! இன்று (24-03-14)12.00 பெண்ணாகரம்: 2.00 மணி பாலக்கோடு: 3.00 மணி தர்மபுரி நாளை (25-03-14) காலை 10 மணிக்கு அரூர், 12 மணி பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் நடக்கிறது. | புதுச்சேரி தொகுதியில் பாமகவை ஆதரிக்கும் தேமுதிக! | தேசிய பாதுகாப்பு சட்ட கைது ரத்து :வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு உள்ளிட்ட 20 பேருக்கு ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை! | எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் மீது பழிவாங்கும் போக்குடன் தமிழக அரசு மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்திருப்பதன் மூலம் நீதி வென்றுள்ளது- மருத்துவர் அய்யா | உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பி. சதாசிவம் அவர்களுக்கு மருத்துவர் இராமதாசு வாழ்த்து | என்.எல்.சி. பங்கு விற்பனை முடிவை கைவிட வேண்டும்: பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை! | அரிசி, காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை! –மருத்துவர் சின்னைய்யா வலியுறுத்தல்!

ஏப்ரல் 19, 2014

முதல்வர் கூட்டத்திற்கு ஆள்திரட்ட தவறாக பயன்படுத்தப்படும் அரசு எந்திரம் : தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் பா.ம.க. புகார்!

Posted by போராளி On 8:49 AM 1 comment

PMK (2)

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்கும் பொதுக்கூட்டங்களுக்கு ஆள் திரட்டுவதற்காக மக்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் தரப்படுகின்றன; அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, தருமபுரி பேரூந்து எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதி முனியன் என்பவர் வேலூர் மத்திய சிறையில் இருந்தவாறே செல்பேசி மூலம் தருமபுரி வாக்காளர்களை தொடர்பு கொண்டு வாக்கு சேகரித்துவருகிறார். இந்த விதிமீறல்களை தடுத்து நிறுத்தும்படி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் அவர்களை  பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைத் தேர்தல் பணி பொறுப்பாளர் வழக்கறிஞர் பாலு, வழக்கறிஞர் ஜோதிமணி ஆகியோர் தலைமையிலான வழக்கறிஞர்கள்  குழு 17-04-2014 அன்று  மதியம் நேரில் சந்தித்து மனு அளித்தது. மனுவின் விவரம் கீழே தரப்பட்டுள்ளது

----------------------------------------

மனு எண் :1

பெறுநர்:

  திரு. பிரவீன் குமார் இ.ஆ.ப., அவர்கள்

  தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி

மதிப்பிற்குரிய அய்யா,

    பொருள் : தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மக்களவை தொகுதிகளில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டத்திற்கு ஆள் திரட்டுவதற்காக அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்படுதல், பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுதல் ஆகியவை குறித்து நடவடிக்கை எடுக்கக் கோருதல் & தொடர்பாக.

   தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்கள் வரும் 24 ஆம் தேதி நடைபெறவுள்ளன. இதையொட்டி கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மக்களவைத் தொகுதிகளில் முதலமைச்சரும், அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தருமபுரி & பென்னாகரம் சாலை மேம்பாலம் அருகில் பல கோடி ரூபாய் செலவில் மேடை மற்றும் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பொதுக்கூட்டத்திற்கு மக்களை கட்டாயப்படுத்தி அழைத்து வருவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேரூந்துகளும், சிற்றுந்துகள் மற்றும் வேன்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சொந்தமான வாகனங்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. இந்த வாகனங்கள் அனைத்துமே போக்குவரத்து, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கட்டாயப்படுத்தி வரவழைக்கப்படவை ஆகும். உதாரணமாக ஜிழி 28 - தி4147 என்ற பதிவு எண்  கொண்ட  அரூர் எருமையம்பட்டி ணிஸிரி மேநிலைப்பள்ளிக்கு சொந்தமான பேரூந்தில், முதலமைச்சர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்காக மக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதற்கான புகைப்பட ஆதாரமும் எங்களிடம் உள்ளது. இதேபோல் பல ஊர்களிலிருந்து அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சியினரால் மிரட்டி வரவழைக்கப்பட்ட வாகனங்களில் தான் மக்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

   பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வரப்படும் மக்களுக்கு வேட்டி அல்லது  சேலைகள், பிரியாணி பொட்டலம், ரூ.300 பணம் மற்றும் அ.தி.மு.க. கரை பதிக்கப்பட்ட துண்டுகள், தொப்பிகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் வழங்கப்படுகின்றன. இதற்காக குண்டல்பட்டி என்ற இடத்தில் உள்ள வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் லாரி லாரியாக வேட்டிகளும், சேலைகளும் கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. கரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கும்பரஹள்ளி என்ற ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றும் பெண்களின் பணி அட்டைகள் அனைத்தையும் பறித்து வைத்துக் கொண்ட ஊராட்சித் தலைவர், அனைத்து பெண்களும் தருமபுரி பொதுக்கூட்டத்திற்கு வந்தால் மட்டுமே அவை திரும்பத் தரப்படும்  என்று மிரட்டியிருக்கிறார். பல இடங்களில் ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் இன்று ஒருநாள் வேலை செய்யாமலேயே ஊதியம் வழங்கப்படுகிறது.

  இதேபோல் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியிலும் முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்காக மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து வகையான விதிமீறல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. இவை தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளிடம் புகார் அளித்த போதிலும் விதிமீறல்களைத் தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை

  இவை அனைத்துமே தெளிவான தேர்தல் நடத்தை விதி மீறல்கள் ஆகும். தேர்தலில் அனைத்து வேட்பாளர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தை இது சிதைத்து விடும். எனவே, இந்த விதிமீறல்களை தடுக்க தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விதி மீறலுக்கு உடந்தையாக இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விதிமீறல்கள் அனைத்தும் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதி அ.தி.மு.க.  வேட்பாளர்களுக்கு சாதகமாக மேற்கொள்ளப்பட்டவை என்பதால், மேடை, அலங்கார வளைவுகள் உள்ளிட்ட அனைத்துக்குமான  செலவுகளை வேட்பாளர்களின் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

----------------------------------------

மனு :2

பெறுநர்:

  திரு. பிரவீன் குமார் இ.ஆ.ப., அவர்கள்

  தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி

  மற்றும் அரசு முதன்மை செயலாளர்,

  தலைமைச் செயலகம், சென்னை& 600 009

    மதிப்பிற்குரிய அய்யா,

    பொருள் : தருமபுரி மக்களவைத் தொகுதி வாக்காளர்களிடையே, தூக்கு தண்டனை கைதி ஒருவர் சிறையிலிருந்தவாறு வாக்கு கேட்பதை தடுத்து நிறுத்த  நடவடிக்கை எடுக்கக் கோருதல் & தொடர்பாக.

  தருமபுரி இலக்கியம்பட்டி பகுதியில் கடந்த 03.02.2000 அன்று நடந்த போராட்டத்தின்போது கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் 3 பேரை பேரூந்துடன் எரித்து கொன்ற வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க. நிர்வாகி முனியன் என்பவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்.  அவர் 96596 70430 என்ற எண் கொண்ட செல்பேசி மூலம் சிறையில் இருந்தாவாறே தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களிடம் தொடர்பு கொண்டு அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கேட்டு வருகிறார். தினமும் குறைந்தது 50 பேரிடமாவது இவ்வாறு அவர் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.

  இது தேர்தல் நடத்தை விதிகளை மட்டுமின்றி, சிறை விதிகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களையும் மீறிய செயலாகும். இதை உடனடியாக தடுத்து நிறுத்துவதுடன், இதற்கு துணையாக இருந்த சிறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

----------------------------------------

1 comments:

Gambling, Sports, Casino - DrmCD
Gambling, Sports, Casino. 천안 출장샵 DrmCD. provides expert 울산광역 출장마사지 on casino games, sports betting, 경상북도 출장샵 and online gambling. We offer 영주 출장안마 some of the best in online 순천 출장마사지