PMK's youtube channel
The PMK Blog
Follow Me on Twitter
வன்னியர் இணைய நண்பர்கள் முக நூல்

பாமகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: புதுச்சேரியில் பாமக போட்டி உறுதி! வேட்பாளராக ஆர்.கே.ஆர் .அனந்தராமன் அறிவிப்பு! | தர்மபுரி தொகுதியில் பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தேசிய ஜனநாயக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்! இன்று (24-03-14)12.00 பெண்ணாகரம்: 2.00 மணி பாலக்கோடு: 3.00 மணி தர்மபுரி நாளை (25-03-14) காலை 10 மணிக்கு அரூர், 12 மணி பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் நடக்கிறது. | புதுச்சேரி தொகுதியில் பாமகவை ஆதரிக்கும் தேமுதிக! | தேசிய பாதுகாப்பு சட்ட கைது ரத்து :வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு உள்ளிட்ட 20 பேருக்கு ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை! | எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் மீது பழிவாங்கும் போக்குடன் தமிழக அரசு மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்திருப்பதன் மூலம் நீதி வென்றுள்ளது- மருத்துவர் அய்யா | உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பி. சதாசிவம் அவர்களுக்கு மருத்துவர் இராமதாசு வாழ்த்து | என்.எல்.சி. பங்கு விற்பனை முடிவை கைவிட வேண்டும்: பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை! | அரிசி, காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை! –மருத்துவர் சின்னைய்யா வலியுறுத்தல்!

ஏப்ரல் 19, 2014

மக்களவைத் தேர்தல்: 39 தொகுதிகளிலும் வெற்றி ஒன்றே இலக்கு என பாடுபடுவீர்! – மருத்துவர் அய்யா அறிக்கை!

Posted by போராளி On 8:16 AM No comments

இது குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

969402_311875882284336_371887553_n

நாடாளுமன்ற மக்களவைக்கு தமிழ்நாட்டில் வரும் 24 ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் எதிராக செயல்படும் சக்திகளை அடையாளம் கண்டு பாடம் புகட்டுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பாக இந்தத் தேர்தல் அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

தமிழ்நாட்டை கடந்த 47 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் தி.மு.கவும், அ.தி.மு.க.வும், தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதாக வெற்று முழக்கத்தை எழுப்பி மக்களை ஏமாற்றி வருகின்றன. கடந்த அரை நூற்றாண்டில் தமிழகம் பெற்றதைவிட இழந்தது தான் அதிகம். காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணை விவகாரம், பாலாறு பிரச்சினை, கச்சத்தீவு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் தமிழகத்தின் உரிமைகள் தாரை வார்க்கப்பட்டுவிட்டன. கடந்த 8 ஆண்டுகளாக தமிழகம் கடுமையான மின்வெட்டில் சிக்கித் தவிக்கிறது. ஒளிமயமான எதிர்காலத்தை தருவதாக வாக்குறுதி அளித்து மாறி மாறி ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தமிழ்நாட்டை போட்டிபோட்டுக் கொண்டு இருளில் தள்ளியது தான் மிச்சம். கடுமையான மின்வெட்டால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தது, பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள உற்பத்தி பாதிக்கப்பட்டது போன்றவை தமிழகத்திற்கு  அ.தி.மு.க.வும், தி.மு.க.வும், இழைத்த தீங்குகளில் சிலவாகும். தமிழகத்தின் உரிமைகளுக்கு குரல் கொடுக்க வேண்டிய இரு கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வீசியடித்து தமிழகத்தை சீரழிவுப் பாதையில் அழைத்துச் சென்று அதல பாதாளத்தில் தள்ளியது தான் 47 ஆண்டுகளில் நாம் கண்ட பலன் ஆகும்.

தெருக்கள் தோறும் அரசு சார்பில் மதுக்கடைகளை திறந்து மக்களை குடிகாரர்களாக்கியது, அரசு நடத்த வேண்டிய கல்விக் கூடங்களை தனியாரிடம் தாரை வார்த்து கல்விக் கொள்ளைக்கு வழி வகுத்தது, இலவசங்களை கொடுத்து மக்களை சோம்பேறிகளாக்கியதுடன், தமிழகத்தின் உற்பத்தித் திறனை வீழ்ச்சியடையச் செய்தது, இலவசங்களை வழங்குவதற்காக ஒருபுறம் மதுக்கடைகளை திறந்ததுடன், மறுபுறம் கடனை வாங்கிக் குவித்து ஒவ்வொரு தனிநபரின் தலையிலும் ரூ.25,000 கடன் சுமையை சுமத்தியிருப்பது ஆகியவை தான் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வின் சாதனைகள் ஆகும்.

தமிழகத்தில் நடைபெற்ற ஆட்சிகளின் அவலம் இதுவென்றால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்கள் எண்ணிலடங்காதவையாகும். தமிழக மீனவர்கள் சிங்களப்படையினரால் சுட்டுக் கொல்லப் படுவதையும், தாக்கப்படுவதையும் தடுக்காதது, ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்த கொடியவன் இராஜபக்சேவுக்கு துணை நிற்பது, காவிரி உள்ளிட்ட பிரச்சினைகளில் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டது, பெட்ரோல், டீசல் விலைகளை கடந்த 5 ஆண்டுகளில் 25க்கும் அதிகமான முறை உயர்த்தி விலைவாசி உயர்வுக்கு வழி வகுத்தது என மத்திய அரசின் துரோகங்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

மாநிலத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளும், மத்தியில் காங்கிரசும் இழைத்த துரோகங்கள் மற்றும் கொடுமைகளுக்கு கணக்கு தீர்க்கும் நாள் தான் வரும் 24 ஆம் தேதி ஆகும். தமிழகத்திற்கு எதிரான சக்திகளை வீழ்த்த வேண்டும் என்பதற்காகத் தான் பாரதிய ஜனதா தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் , கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகியவை இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டனி என்ற வலிமையான அணியை உருவாக்கியிருக்கின்றன.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் வலுவான ஆட்சியை அமைத்து, அதன்மூலம் தமிழகம் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும், தமிழகத்தைச் சீரழித்த அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பது தான் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் நோக்கம் ஆகும்; தமிழக மக்களின் விருப்பமும் இது தான். தமிழகத்தில் அ.தி.மு.க.,

தி.மு.க.வுக்கு மாற்றாக ஓர் அணி உருவாகாதா? என்று ஏங்கிக் கொண்டிருந்த மக்கள் இப்போது

நாம்  அமைத்துள்ள கூட்டணியை மனதார வாழ்த்தி வரவேற்கின்றனர். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் நமது அணிக்கு வெற்றி என்ற பயிரை தமிழக மக்கள் விளைவித்துள்ளனர். அதை சிந்தாமல் சிதறாமல் அறுவடை செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் , கடமையும்  பாட்டாளி மக்கள் கட்சி மற்றும்  கூட்டணிக் கட்சிகளுக்கு உள்ளது.

தமிழகத்தில் நீலகிரி நீங்கலாக 38 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால் தான் தமிழகத்தின் நலனுக்காக நாம் நினைப்பதையெல்லாம் சாதிக்க முடியும். அத்தகைய வெற்றிக்காக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருதாய் மக்களாக கைகோர்த்து உழைக்க வேண்டும். ஊர் கூடினால் தான் தேர் இழுக்க முடியும் என்பதை உணர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் வெற்றி ஒன்றே இலக்கு என நினைத்து பாடுபட வேண்டும். குறிப்பாக பாரதிய ஜனதா, தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் , கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகிய கட்சிகளின் வெற்றிக்காக பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் ஒருபடி கூடுதலாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல் புதுவையில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ஆர்.கே.ஆர். அனந்தராமனையும் வெற்றி பெறச் செய்வதற்காக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பா.ம.க.வினர் பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.