PMK's youtube channel
The PMK Blog
Follow Me on Twitter
வன்னியர் இணைய நண்பர்கள் முக நூல்

பாமகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: புதுச்சேரியில் பாமக போட்டி உறுதி! வேட்பாளராக ஆர்.கே.ஆர் .அனந்தராமன் அறிவிப்பு! | தர்மபுரி தொகுதியில் பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தேசிய ஜனநாயக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்! இன்று (24-03-14)12.00 பெண்ணாகரம்: 2.00 மணி பாலக்கோடு: 3.00 மணி தர்மபுரி நாளை (25-03-14) காலை 10 மணிக்கு அரூர், 12 மணி பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் நடக்கிறது. | புதுச்சேரி தொகுதியில் பாமகவை ஆதரிக்கும் தேமுதிக! | தேசிய பாதுகாப்பு சட்ட கைது ரத்து :வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு உள்ளிட்ட 20 பேருக்கு ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை! | எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் மீது பழிவாங்கும் போக்குடன் தமிழக அரசு மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்திருப்பதன் மூலம் நீதி வென்றுள்ளது- மருத்துவர் அய்யா | உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பி. சதாசிவம் அவர்களுக்கு மருத்துவர் இராமதாசு வாழ்த்து | என்.எல்.சி. பங்கு விற்பனை முடிவை கைவிட வேண்டும்: பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை! | அரிசி, காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை! –மருத்துவர் சின்னைய்யா வலியுறுத்தல்!

மார்ச் 22, 2014

கவுத்தி மலை இரும்புத்தாது சுரங்கத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் - மருத்துவர் இராமதாசு அறிக்கை

Posted by போராளி On 8:29 AM No comments

இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் மார்ச்18ந்தேதி அன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

gowthimalai

திருவண்ணாமலை மாவட்டம் கவுத்தி மலை மற்றும் வேடியப்பன் மலையில் இரும்புத்தாது சுரங்கம் அமைப்பதற்கான முயற்சிகளில் ஜிண்டால் விஜயநகர் ஸ்டீல் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. தமிழக அரசின் முழுமையான ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகளைக் கண்டித்தும், அதை கைவிடக் கோரியும் திருவண்ணாமலை மக்கள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் இயற்கை வளங்களையும், மக்களின் வாழ்வாதாரங்களையும் அழிக்கக் கூடிய இத் திட்டத்தை திருவண்ணாமலைக்கு கொண்டு வந்ததே இரு திராவிடக் கட்சிகளின் அரசுகள் தான். 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அப்போதைய அ.தி.மு.க அரசு தான் தான் கவுத்தி மற்றும் வேடியப்பன் மலைகளில் உள்ள இரும்புத் தாதுவை ஜிண்டால் நிறுவனமும், தமிழக அரசுக்கு சொந்தமான டிட்கோ நிறுவனமும் இணைந்து வெட்டி எடுப்பதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. அப்போதே இந்தத் திட்டம் இயற்கை வளங்களை அழித்துவிடும் என்றும் இத்திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். ஆனால், அதன்பின் வந்த தி.மு.க. அரசும் இத்திட்டத்தை செயல்படுத்த ஜிண்டால் நிறுவனத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை அளித்தது. அப்போதும் இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். அந்த நேரத்தில் திருவண்ணாமலை மக்கள் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி அதன்படி அப்போதைய மாவட்ட ஆட்சியர் அனுப்பிய அறிக்கையின் அடிப்படையிலும், உச்சநீதிமன்றம் அமைத்த அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையிலும் இத்திட்டம் 2008 ஆம் ஆண்டில் தடுத்து நிறுத்தப்பட்டது.

-அதன்பின் மீண்டும் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு மற்றும் மத்திய அரசின் ஒத்துழைப்புடன் பல உண்மைகளை மறைத்து இத்திட்டத்தை செயல்படுத்த ஜிண்டால் நிறுவனம் அனுமதி பெற்றிருக்கிறது. கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த போது இதை சுட்டிக்காட்டிய நான், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் அதைக் கண்டித்து மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்திருந்தேன். ஆனால், மக்களின் நலனில் அக்கறை இல்லாத தமிழக அரசோ இத்திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு பதிலாக ஒத்துழைப்பு  அளித்து வருகிறது. இப்பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது.

கவுத்தி மற்றும் வேடியப்பன் மலைகளில் இரும்புத்தாது வெட்டி எடுக்கும் திட்டத்திற்காக வனத்துறைக்கு சொந்தமான 325 ஹெக்டேர் நிலம் தாரை வார்க்கப்படுவதுடன், 26,918 ஏக்கர் விளைநிலங்களும் கையகப்படுத்தப்படும். இதனால், 51 கிராமங்களில் உள்ள ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள். மேலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களும், அரிய மூலிகைகளும் அழிக்கப்பட்டுவிடும்.  இந்த இயற்கை வளங்களை அழித்துவிட்டு இரும்புத்தாது தோண்டி எடுத்தால் கிடைக்கும் லாபத்தைவிட அதனால் ஏற்படும் இழப்பு தான் அதிகமாக இருக்கும் என்று உச்சநீதிமன்றத்தின் அதிகாரமளிக்கப்பட்ட குழு எச்சரித்திருக்கிறது.

மலையைத் தோண்டி இரும்புத்தாது எடுப்பதால் ஏற்படும் அதிர்வு 10 கி.மீ சுற்றளவிலுள்ள கிராமங்களை  பாதிக்கும். மாதம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருவண்ணாமலை கிரிவலப் பாதையும் பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி, இத்திட்டத்தை செயல்படுத்துவதால் ஜிண்டால் நிறுவனம் கொழிக்குமே தவிர, தமிழகத்திற்கு எந்த பயனும் கிடையாது. இத்திட்டப்படி ஜிண்டால் ஆலைக்கு கிடைக்கும் லாபத்தில் ஒரே ஒரு விழுக்காடு மட்டும் தான் 3 ஆண்டுகளுக்கு தமிழக அரசுக்கு கிடைக்கும். இத்திட்டத்தால் உள்ளூர் மக்களில் வெறும் 180 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும்.

எனவே, எந்தப் பயனும் தராமல் பாதிப்பை மட்டுமே  கொடுக்கும் இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், ஏற்கனவே அறிவித்தவாறு, கவுத்தி மலை மற்றும் வேடியப்பன் மலை இரும்புத்தாது சுரங்கத் திட்டத்திற்கு எதிராக திருவண்ணாமலை மாவட்ட மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவில் அறப்போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.