PMK's youtube channel
The PMK Blog
Follow Me on Twitter
வன்னியர் இணைய நண்பர்கள் முக நூல்

பாமகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: புதுச்சேரியில் பாமக போட்டி உறுதி! வேட்பாளராக ஆர்.கே.ஆர் .அனந்தராமன் அறிவிப்பு! | தர்மபுரி தொகுதியில் பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தேசிய ஜனநாயக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்! இன்று (24-03-14)12.00 பெண்ணாகரம்: 2.00 மணி பாலக்கோடு: 3.00 மணி தர்மபுரி நாளை (25-03-14) காலை 10 மணிக்கு அரூர், 12 மணி பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் நடக்கிறது. | புதுச்சேரி தொகுதியில் பாமகவை ஆதரிக்கும் தேமுதிக! | தேசிய பாதுகாப்பு சட்ட கைது ரத்து :வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு உள்ளிட்ட 20 பேருக்கு ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை! | எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் மீது பழிவாங்கும் போக்குடன் தமிழக அரசு மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்திருப்பதன் மூலம் நீதி வென்றுள்ளது- மருத்துவர் அய்யா | உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பி. சதாசிவம் அவர்களுக்கு மருத்துவர் இராமதாசு வாழ்த்து | என்.எல்.சி. பங்கு விற்பனை முடிவை கைவிட வேண்டும்: பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை! | அரிசி, காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை! –மருத்துவர் சின்னைய்யா வலியுறுத்தல்!

மார்ச் 22, 2014

என்.எல்.சி. ஊழியர் சுட்டுக்கொலை, தடியடி - அடக்குமுறைக்கு மருத்துவர் இராமதாசு கண்டனம்

Posted by போராளி On 8:24 AM No comments

இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் மார்ச்18ந்தேதி அன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

d

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க நுழைவாயிலில், அந்நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளரான ராஜ்குமார் என்பவரை அங்கு காவலுக்கு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் நேற்று துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டிருக்கிறார். இதில் அந்த தொழிலாளி மூளை சிதறி உயிரிழந்திருக்கிறார். காவல்படையினரின் இந்த கொடூரச் செயல் கண்டிக்கத்தக்கது. கொல்லப்பட்ட ஊழியரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழிலாளி கொல்லப்பட்டதை அறிந்து அங்கு கூடி ஆர்ப்பாட்டம் நடத்திய என்.எல்.சி. நிறுவனத்தின்  மற்ற தொழிலாளர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் தமிழக காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள வெள்ளூர், வேப்பங்குறிச்சி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த அப்பாவி மக்களை காரணமே இல்லாமல் காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்துறையினரின் இந்த அடக்குமுறையும் கண்டிக்கத்தக்கது.

என்.எல்.சி. நிறுவனத்தின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்  காவல் பணியை மட்டுமே பார்க்க வேண்டும்.  சக தொழிலாளியை சந்திப்பதற்காக வந்த ஊழியரை, எந்த விதமான கோபமூட்டுதலும் இல்லாத சூழலில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் சுட்டுக் கொன்றிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். பதற்றம் நிறைந்த எல்லைப் பகுதிகளில் கூட இப்படியெல்லாம் நிகழ்வதில்லை.

எனவே, இதை கொடூரமான கொலைக் குற்றமாக கருதி சம்பந்தப்பட்ட வீரர் மீது வழக்குப் பதிவு செய்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் - கொல்லப்பட்ட ராஜ்குமாரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், அவரது மனைவிக்கு என்.எல்.சி.யில் வேலை வழங்க வேண்டும்.   நீதிகேட்டு போராடிய தொழிலாளர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் கைது செய்யப்பட்ட வெள்ளூர், வேப்பங்குறிச்சி மக்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.


இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.