PMK's youtube channel
The PMK Blog
Follow Me on Twitter
வன்னியர் இணைய நண்பர்கள் முக நூல்

பாமகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: புதுச்சேரியில் பாமக போட்டி உறுதி! வேட்பாளராக ஆர்.கே.ஆர் .அனந்தராமன் அறிவிப்பு! | தர்மபுரி தொகுதியில் பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தேசிய ஜனநாயக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்! இன்று (24-03-14)12.00 பெண்ணாகரம்: 2.00 மணி பாலக்கோடு: 3.00 மணி தர்மபுரி நாளை (25-03-14) காலை 10 மணிக்கு அரூர், 12 மணி பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் நடக்கிறது. | புதுச்சேரி தொகுதியில் பாமகவை ஆதரிக்கும் தேமுதிக! | தேசிய பாதுகாப்பு சட்ட கைது ரத்து :வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு உள்ளிட்ட 20 பேருக்கு ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை! | எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் மீது பழிவாங்கும் போக்குடன் தமிழக அரசு மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்திருப்பதன் மூலம் நீதி வென்றுள்ளது- மருத்துவர் அய்யா | உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பி. சதாசிவம் அவர்களுக்கு மருத்துவர் இராமதாசு வாழ்த்து | என்.எல்.சி. பங்கு விற்பனை முடிவை கைவிட வேண்டும்: பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை! | அரிசி, காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை! –மருத்துவர் சின்னைய்யா வலியுறுத்தல்!

டிசம்பர் 11, 2013

சமையல் எரிவாயு விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் - மருத்துவர் இராமதாசு

Posted by போராளி On 11:36 AM 1 comment

இது குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமையல் எரிவாயு விலை உருளைக்கு ரூ.3.46 உயர்த்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வு கடுமையாக கண்டிக்கத் தக்கது. 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவடையும் வரை காத்திருந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் விலை உயர்வை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும்.
எரிபொருள் விலை நிர்ணயத்தில் மத்திய அரசு தவறானக் கொள்கையை கடைபிடித்து வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றை மக்களின் அடிப்படைத் தேவையாக கருதி விலை நிர்ணயம் செய்ய வேண்டிய அரசு, அவற்றை பணம் காய்க்கும் மரமாக கருதி வரி மேல் வரி விதித்து வருகிறது. கடந்த 2012&13 ஆண்டில் எரிபொருட்களின் மீதான வரி மூலமாக மட்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு ரூ. 3 லட்சம் கோடிக்கும் வருவாய் கிடைத்திருக்கிறது என்பதிலிருந்தே எரிபொருள் விலை என்ற பெயரில் ஏழை மக்களை மத்திய, மாநில அரசுகள் கசக்கிப் பிழிகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
சமையல் எரிவாயு உருளைகளை வினியோகிக்கும் முகவர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகை உயர்த்தி வழங்கப்பட்டது தான் விலை உயர்வுக்கு காரணம் என்று மத்திய அரசு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எரிவாயு முகவர்களுக்கு ஓர் உருளைக்கு ரூ. 37.25 கமிஷனாக வழங்கப்பட்டு வருகிறது. முகவர்களின் கமிஷன் தொகை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தான் உருளைக்கு ரூ.11.50 உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் முகவர்களின் கமிஷனை மீண்டும் ரூ.3.46 உயர்த்துவதும், அதை பொது மக்களின் தலையில் சுமத்துவதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.  முகவர்களின் கமிஷனை உயர்த்துவதாக இருந்தால் அதை மத்திய அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து  அந்த சுமையையும் மக்களின் தலையில் சுமத்துவது முறையல்ல. முகவர்களின் நலனில் காட்டும் அக்கறையில் சிறிதளவையாவது மக்களிடமும் மத்திய அரசு காட்ட வேண்டும்.
ஏற்கனவே, ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டு வந்த சமையல் எரிவாயு உருளைகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு ஒன்பதாக மத்திய அரசு குறைத்து விட்டது. இதனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு குறைந்தது  2,000 ரூபாயாவது கூடுதலாக செலவாகிறது. இன்னொருபுறம் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் இன்னும் ஒரு விலை உயர்வை மக்கள் தாங்க மாட்டார்கள். எனவே, முகவர்களுக்கான கமிஷன் தொகை உயர்வை மத்திய அரசே ஏற்றுக் கொண்டு, சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.

1 comments:

"இன்றைய தங்கம் விலை நிலவரம்" என்பது போல "இன்றைய அமைச்சர் நிலவரம்" என பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தி வரும் அளவுக்கு நிலவரம் உள்ளது. ஒரு சிறுவனிடம், ஒரு குறிப்பிட்ட துறையின் அமைச்சர் யார் என்று கேட்டால் அவன் சொல்வது " இன்றைய நிலவரம் இவர்" நாளை யார் என்று தெரியாது என்கிறான்.

ஒரு நடிகருக்கு கையும் நீளம். வாயும் நீளம். அதனால்தான் அந்த நடிகர் கட்சியிலிருந்து ஒரு அரசியல் ஆசான் விலகிவிட்டார். இனி அந்த கட்சிக்கு தேய்பிறை தான். அந்த நடிகருக்கு அடுத்தவர்களை தூற்றி வாருவது கைவந்த கலை. ஒரு வேட்பாளர் தனது பெயரை தவறாக சொன்னதை சுட்டிக்காட்டியதற்கு அந்த வேட்பாளரை அடித்தது, நிதானம் இன்றி உளறுவது, கேள்வி கேட்கும் நிருபர்களை கடிந்து கொள்வது, குடித்தால் என்ன தவறா ? என்று சொல்லும் இந்த நடிகரெல்லாம் தன்னை தலைவன் என்று சொல்லிக்கொண்டு திரிவது அரசியலில் ஒரு சாபக்கேடு.

இரண்டு ஊழல் கட்சிகளில், ஒரு கட்சியின் ஆயுள் 2011 தேர்தலோடு முடிந்து விட்டது. இன்னொரு கட்சியின் ஆயுள் 2016 தேர்தலோடு முடிந்து விடும்.