வன்னியர் சங்கம் சார்பில், 1987ம் ஆண்டிலிருந்து, ஆண்டுதோறும் சித்திரை பவுர்ணமி அன்று, "சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா' நடத்தப்படுகிறது.
இவ்வாண்டிற்கான விழா, மாமல்லபுரத்தில் நேற்று நடந்தது. சென்னையில் கடந்த, 22ம் தேதி நடந்த துவக்க விழாவில், உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டு, விழாவை துவக்கி வைத்தார்.
மாமல்லபுரத்தில் நேற்று மாலை, கோலாகலமான விழா நடந்தது. மாலை, 5:00 மணிக்கு துவங்கிய விழாவிற்கு, சங்க தலைவர் குரு தலைமை தாங்கினார். பா.ம.க., தலைவர் கோ.க.மணி முன்னிலை வகித்தார். சங்க நிறுவனர் ராமதாஸ், பாட்டாளி இளைஞர் சங்கத் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்றனர். வன்னியர் புராணம், பாயும்புலி பண்டாரக வன்னியன் நாடகம், கொள்கை விளக்க இசைப்பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. இதை தவிர, பல்வேறு சமூக அமைப்புகளின் பிரமுகர்கள் பேசினர்.
. நிகழ்ச்சியில் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் பேசியதாவது:
நாட்டிலேயே இளைஞர்களுக்கு கடந்த 32 ஆண்டுகளாக நல்வழி உறுதிமொழியை வழங்கி வரும் ஒரே கட்சியாக பா.ம.க. உள்ளது. ஒற்றுமையாகவும், வன்முறை, தீவிரவாதம், பெண்ணாசை இன்றியும், மது, புகை, சூதாட்டத்துக்கு அடிமையாகாமலும் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு இளைஞரிடமும் உறுதிமொழி பெற்று வருகிறோம்.
வறுமை நீங்க, நாடு உயர, குடும்பம் உயர நல்வழியில் நடப்போம் என்று தொடர்ந்து உறுதிமொழி எடுத்து வருகிறோம்.
இது தொடர்பாக இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகளையும் அளிக்கிறோம். இந்த நடைமுறை வேறு கட்சிகளில் உள்ளதா?
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி திருமண வயதை எட்டாத சிறுமிகளின் வாழ்க்கை ஒருசிலரால் சீரழிக்கப்படுகிறது. இதை பாதிக்கப்பட்ட பெற்றோர்களும், நாங்களும் எடுத்துக் கூறினால் ஜாதி வெறியைத் தூண்டுவதாக காவல்துறை எங்கள் மீது குற்றம் சாட்டுகிறது. தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும் இச்சட்டத்தை முற்றிலும் நீக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நாங்கள் சட்டத்தை நீக்கச் சொல்லவில்லை. அதில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும், முறையாக பயன்படுத்த வேண்டும் என்றுதான் கூறுகிறோம்.
14, 15 வயது சிறுமிகளைக் காணவில்லை என்று புகார் செய்தால் காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை. தவறு செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தால், இதுபோன்ற தவறுகள் தடுக்கப்படும். காவல்துறையின் மெத்தனமே இதுபோன்ற தவறுகளுக்குக் காரணம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. அவர்களுடன் சமுதாயத்தில் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்.
காதல் நாடகம் என்ற பெயரில் பணம் பறிப்பதைத்தான் எதிர்க்கிறோம். காதல் புனிதமானது என்ற ஒரு சிலர் கூறுகின்றனர். நாங்கள் காதலை எதிர்க்கவில்லை. 21 வயதுக்கு பின் காதலித்தால் அது காதல். ஆனால், 12, 13, 15 வயது பெண்களை காதல் என்ற பெயரில் பலாத்காரம் செய்வது எந்த வகையில் நியாயம்?
தமிழகம் அமைதிப்பூங்காவாக மாற அனைத்து சமுதாய மக்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார் ராமதாஸ்.
முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:–
980–ம் ஆண்டு பிரிந்து கிடந்த வன்னியர் சங்கங்களை ஒன்றிணைத்து பல போராட்டங்களை நடத்தினோம். 21 உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம். ஆனால் அதற்கு பலன் இல்லை. நமக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும். ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள வேண்டும் என்றுதான் பா.ம.க.வை டாக்டர். ராமதாஸ் தொடங்கினார்.
2016–ம் ஆண்டு தமிழகத்தில் பா.ம.க ஆட்சி அமையும். வன்னியர்களுக்கு 20 சதவீத தனிஇட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு வந்தோம். யாரும் தர முன்வரவில்லை. இனிநாமே எடுத்துக் கொள்வோம். மற்ற சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவோம். தமிழகத்திலுள்ள நம் அத்தனை சொந்தங்களும் வாக்களித்தால் 2016–ம் ஆண்டு பா.ம.க ஆட்சி அமையும். பா.ம.க ஒரு வித்தியாசமான கட்சி. அதிக இளைஞர்களுடன் வேகமாக வளர்ந்து வரும் கட்சி. சமச்சீர் கல்வியை கொண்டு வந்த கட்சி. மறுமலர்ச்சி வேண்டும் என்று வலியுறுத்தும் கட்சி
தமிழகத்தில் 46 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆட்சி செய்து தமிழக மக்களை நாசம் செய்து வருகிறது. திராவிட கட்சிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது அடுத்தது யார்? அதுதான் பா.ம.க தமிழகத்தை ஆள எங்களுக்கு தகுதி இருக்கிறது. வாய்ப்பு தாருங்கள். பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்போம். வரும் தேர்தல்களில் பா.ம.க யாருடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை. பா.ம.க தலைமையில் சமூக கூட்டணி அமைப்போம். எங்களுக்கும் வாய்ப்பு தாருங்கள்.
தீர்மானங்கள் : தமிழகத்தில், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்; உயர்படிப்புகளுக்கான நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும்; கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ஆளவந்தார் நாயகர் பெயர் சூட்டவேண்டும்; தமிழக வறட்சி பாதிப்பை போக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
Vanniyar Vizha - Resolution by Vanniyar Sangam
விழாவில் பங்கேற்பதற்காக, நேற்று காலையிலிருந்தே, வயது வித்தியாசமின்றி இளைஞர்கள், முதியவர்கள் என, பல லட்சக்கணக்கானோர் குவிந்தனர். பாதுகாப்பு பணியில், 2,000 காவலர்கள் மற்றும் விழாக்குழு இளைஞர்கள் ஈடுபட்டனர். பிரம்மாண்டமான எல்.இ.டி., திரைகளில் நிகழ்ச்சி திரையிடப்பட்டது.
விழாவில், பா.ம.க., துணை பொதுச் செயலர்கள், அ.கி.மூர்த்தி, திருக்கச்சூர் ஆறுமுகம், பொன்.கங்காதரன், மாவட்ட தலைவர் கணேசமூர்த்தி, செயலர் வாசு உட்பட பல பா.ம.க., பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மாமல்லபுரம் பா.ம.க., நகர செயலர் ராஜசேகரன் நன்றி உரையாற்றினார்.
1 comments:
இன்றைய செய்தியை பார்த்து மக்கள் மனம் நொந்து விட்டனர்.
சட்டம் ஒழுங்கு கெட்டு போய் விட்டது.
வெளியூரிலிருந்து வன்னியர் இளைஞர் மாநாட்டுக்கு வந்த வாகனங்களை திட்டமிட்டே ஒரு கும்பல் பிரச்சினை ஏற்படுத்தி கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் இருவர் இறந்தனர். ஒருவர் தஞ்சாவூர். இன்னொருவர் அரியலூர். இப்படி கலவரம் ஏற்பட்ட இடத்துக்கும், இவர்களுக்கும் என்ன சம்மதம். அவர்கள் அந்த ரோட்டில் பயணம் செய்தது குற்றமா ? இப்படி இந்த பகுதியை பற்றி எதுவுமே தெரியாத அப்பாவிகள் மீது "வன்னியர் மாநாட்டுக்கு போகிறார்கள்" என்ற ஒரே காரணத்துக்காக திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர் ஒரு கும்பல்.
ஒரு கோடி மக்கள் செல்லும் மாநாட்டுக்கு , பயணம் செய்யும் மெயின் ரோட்டில் , பிரச்சினை உள்ள பகுதியில் ஏன் போலீஸ் பாதுகாப்பு போடவில்லை. பிரச்சினை காரணமாக , வெளியூரிலிருந்து வந்த பல வாகனங்கள் திரும்பி சொந்த ஊருக்கே போய்விட்டது.
இப்படி திட்டமிட்டே அந்த பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் கலவரம் செய்து இரு உயிர் பலியாகி விட்டது. மேலும் பலர் பலத்த காயம். இதுவே போதும் கலவரம் செய்தது யார் என்று தெரிகிறது.
கடலூரில் ஒரு வாகனம் மோதி ஒரு இளைஞர் பலி. சரியான போக்குவரத்து காவல் இல்லாததே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. மாநாட்டுக்கு மக்கள் அதிக வாகனங்களில் செல்லும் பாதை என்று தெரியாதா ? .
வேலூர் ,காவேரிப்பாக்கம் அருகே , மேடு பள்ளமான சரியில்லாத ரோட்டில் சென்ற ஒரு வாகனம் தடுமாறி , ஒருவர் கீழே விழுந்து இறந்தார். இதற்கு ரோட்டில் சரியான பாதுகாப்பு இல்லாததே மற்றும் குண்டும் , குழியுமே காரணம்.
கருத்துரையிடுக