இது குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் டிசம்பர் –21 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-
சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா பகுதியில் நடந்த கலவரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 28 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர மேலும் 52 தமிழர்களை சிங்கப்பூர் அரசு திடீரென வெளியேற்றியிருக்கிறது. சிங்கப்பூர் அரசின் இச்செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
சிங்கப்பூரில் கடந்த 8 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் குமாரவேல் என்ற தொழிலாளி சாலைவிபத்தில் கொல்லப்பட்டார். இதையடுத்து நடந்த வன்முறைகளுக்கு தமிழர்கள் தான் காரணம் என்று கூறி அங்கு பணியாற்றி வந்த நூற்றுக்கணக்கான தமிழர்களை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்தது. அவர்களில் 28 பேரின் கைதை மட்டும் கணக்கு காட்டிய காவலர்கள், மற்றவர்களை சட்டவிரோதக் காவலில் வைத்துக் கொடுமைப் படுத்தினர். அப்போதே இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட நான் தமிழர்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படலாம் என்றும், அதை தடுக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் 52 தமிழர்கள் வெளியேற்றப்படுள்ளனர். இடம்பெயர்ந்த தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கென பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவற்றில் ஒன்றைக் கூட பின்பற்றாமல் சர்வாதிகாரமான முறையில் சிங்கப்பூர் அரசு நடந்திருக்கிறது.
சிங்கப்பூரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள 52 தமிழர்களுக்கும், அங்கு நடந்த கலவரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. கலவரம் நடந்த பகுதியில் காவல்துறை எச்சரித்த பிறகும் கலைந்து செல்ல வில்லை என்பது தான் இவர்கள் மீது சிங்கப்பூர் அரசு சுமத்தியுள்ள குற்றச்சாற்று ஆகும். இதுபோன்ற சாதாரண செயலுக்காக 52 பேரை நாடு கடத்துவது என்பது மிகப்பெரிய தண்டனையாகும். மேலும், இவர்களிடம் முறைப்படி விசாரணை நடத்திய பிறகு தான் வெளியேற்றியிருக்க வேண்டும். ஆனால், வெறும் 16 பேரிடம் மட்டும் அவசர, அவசரமாக விசாரணை நடத்திய சிங்கப்பூர் அரசு, 2 நாட்களில் அனைத்து நடைமுறைகளையும் முடித்து இந்தியாவுக்கு அனுப்பியிருக்கிறது. விசாரணையின்போது , தமிழர்களுக்கு உதவ வழக்கறிஞர்களையும், மொழி பெயர்ப்பாளர்களையும் அமர்த்தியிருக்க வேண்டும். ஆனால், அதையெல்லாம் செய்யாமல், தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் அவர்களை தூக்கி வீசி எறிந்திருப்பது மிகப்பெரிய மனித உரிமை மீறல் ஆகும். இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.
சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படுவதில்லை; அவர்கள் மிகவும் மோசமான சூழல்களில் வாழ்கின்றனர். வெளிநாட்டவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு, பேச்சு சுதந்திரம், பொது இடங்களில் கூடும் உரிமை, பாகுபாடின்றி வாழும் உரிமை போன்ற எதுவும் வழங்கப்படுவதில்லை. சிங்கப்பூர் குடிமக்களுக்கு மட்டும் தான் அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசியல் சட்டத்திலேயே கூறப்பட்டிருக்கிறது. மேலும் சிங்கப்பூர் அரசு கடுமையான சட்டங்களை இயற்றி, அதை கடுமையான முறையில் நடைமுறைப் படுத்தி வருகிறது. தமது நாட்டு சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சிங்கப்பூர், மற்ற நாட்டு தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளைக் கூட அங்கீகரிக்க மறுப்பது நியாயமல்ல.
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஓட்டுனர்கள் நடத்திய வேலைநிறுத்தம், இப்போது நடந்த கலவரம் ஆகியவற்றைத் தொடர்ந்து அங்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களிடம் காட்டப்படும் பாகுபாடுகளும், மனித உரிமை மீறல்களும் அம்பலமாகியுள்ளன. இத்தகைய சூழலில் இனியும் எந்த தொழிலாளரும் உரிமை கோரி போராடிவிடக் கூடாது என்று எச்சரிக்கும் வகையில் தான் 52 தமிழர்களை சிங்கப்பூர் அரசு வெளியேற்றியுள்ளது. இதனால், அந்த தொழிலாளர்களுக்கு வாழ்வாதார பாதிப்பு, மீண்டும் வெளிநாடு செல்ல முடியாத நிலைமை என பல்வேறு இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இதற்காக, சிங்கப்பூர் அரசை இந்தியா கண்டிப்பதுடன், வெளியேற்றப்பட்ட 52 தமிழர்களுக்கும், விபத்தில் கொல்லப்பட்ட சக்திவேல் குமாரவேலுவின் குடும்பத்திற்கும் உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும். மேலும், தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் தமிழ் பேசுபவர்களையே தூதர்களாகவும், தூதரகப் பணியாளர்களாகவும் நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
1 comments:
ஏற்காடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் "வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு தன் கட்சி கொடுத்தது" என்று
ஒருவர் சொல்கிறார். யார் காதில் இந்த பூ சுத்துகிறார் என்று தெரியவில்லை. நயவஞ்சமாக 101 சாதிகளை அதில் சேர்த்ததன் மூலம், குறிப்பாக தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் அந்த 101 சாதிகள்தான் முழுமையாக பலன் பெற்றுள்ளது. வடமாவட்டங்களில் மட்டுமே கொஞ்சம் வன்னியர்கள் பலன் பெற்றனர்.
இதனால் அந்த 101 சாதிகள், வன்னியர்களை தங்களுக்கு சமமான சாதி என்று தம்பட்டம் அடித்து கொண்டு காதல் நாடகம் நடத்துகிறார்கள். எனவே வன்னியர்களின் தனி இட ஒதுக்கீடு அவசியமாகிறது.
சோழன், பல்லவன், சம்புவராயர் போன்ற மன்னர்களின் வழிதோன்றல் வன்னியர்கள் என்று வரலாறு சொல்கிறது. சேரன், பாண்டியன் போன்ற மன்னர்களின் வழித்தோன்றல் யார் என்ற வரலாறு இல்லை.
நம்முடைய முன்னோர்கள் ஆண்ட இந்த மண்ணை பின்னால் வந்த ஆங்கிலேயர்கள் தங்களுடைய விஞ்ஞான யுக்தி மற்றும் நவீன ஆயுதம் மூலம் கைப்பற்றினர். அதன் பின் மகாத்மா காந்தியடிகள் மூலம் மண்ணின் மைந்தர்களின் உரிமை காப்பாற்றப்பட்டு சுதந்திரம் கிடைத்தது. ஆனால் அண்டி பிழைக்க வந்த சினிமா கூத்தாடிகள் கூட்டம் ஆட்சியை பிடித்து மண்ணின் மைந்தர்களின் ஆளும் உரிமையை பறித்தது. இதற்கு இன்று வரை ஒரு விடிவு இல்லை.
முன்பு தமிழ் மண்ணை ஆண்ட பெரும்பான்மை மக்களின் உரிமை இவ்வாறு கொள்ளை போயுள்ளது. இந்த உரிமையை பறித்தவர்கள் இரண்டு ஊழல் கட்சிகள். பெரும்பான்மை வன்னியர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த இரண்டு ஊழல் கட்சிகள், குறைந்தது துணை முதல்வர் பதவி கூட தராமல் வன்னியர்களை ஏமாற்றியது அரசியல் மோசடி.
இந்த உரிமை பற்றி பேசினால் உடனே "ஜாதி வெறி" என்று சொல்கின்றனர் ஒரு சில பொறம்போக்குகள், அனாதைகள்.
ஊழல் செய்த திருடர்களைதான் திரும்ப திரும்ப ஆட்சி நாற்காலியில் மக்கள் அமர்த்துகிறார்கள். "நல்லவர்களுக்கு காலம் இல்லை" என்பது உண்மையாக உள்ளது.
எனவே பெரும்பான்மை மக்கள் உள்ள சமூகத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு மண்ணின் மைந்தர்களின் ஆட்சி கொண்டு வர வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலில் 17 தொகுதிகளில் பாமக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே மற்ற 23 தொகுதிகளிலும் உள்ள கட்சியின் செயல் வீரர்கள் அனைவரும் இந்த 17 தொகுதிகளில் முக்கியத்துவம் கொடுத்து பிரச்சாரம் செய்தால் வெற்றி நிச்சயம். இந்த 17 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட்டால், மற்ற 23 தொகுதி மக்களும் தாமாகவே அடுத்த தேர்தலில் ஆதரிக்க முன்வருவர்.
கருத்துரையிடுக