மரக்காணம் கலவரத்திற்கு நீதி கேட்டு அற வழியில் போராடிய ஆயிரக்கணக்கான பாட்டாளி மக்கள் கட்சியினரை கைது செய்த தமிழக அரசு, அவர்களில் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு மீது மட்டும் வேண்டும் என்றே நான்கு முறை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது . ஏப்ரல் மாதம் 30 ந்தேதி கைது செய்யப்பட்ட அவர் தொடர்ந்து ஏழு மாதங்களுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டார்.
இந்நிலையில், குருவின் தாயார் கல்யானி சென்னை உயர் நீதிமன்றத்தில் தன் மகன் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.குரு மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இச்செய்தி அறிந்த பாமகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இன்று மாலைக்குள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார் என பாமக நிர்வாகிகள் கூறினர்.
1 comments:
மாநிலத்தில் உள்ள 8.5 லட்சம் விவசாயிகள் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் வேளாண்மையை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு மாறிவிட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலை இப்படியே போனால் வருங்காலத்தில் கடல் உணவை மட்டுமே உண்ணும் நிலை வந்துவிடும். எனவே பசுமை புரட்சி அவசியமாகிறது.
இலங்கை தமிழர்கள் படுகொலை மீதான மனித உரிமை மீறல் குறித்து இலங்கை அரசுக்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா கொடுத்துள்ள எச்சரிக்கை ஒரு திருப்பு முனையாக உள்ளது. ஆனால் இந்திய அரசு உருப்படியாக எதையும் செய்யவில்லை. தமிழ் நாட்டில் ஒருவர் செய்த இரண்டு மணி நேர உண்ணாவிரத நாடகத்தை கண்டு மக்கள் வெறுத்தது தான் இதில் கேலிக்கூத்து.
ஏற்காடு தொகுதியில் குறிப்பாக 45 சதவீத வன்னியர்களை சுற்றி சுற்றி ஈ மொய்ப்பது போல மொய்த்து விட்டார்கள் ஊழல் கட்சியினர். வன்னியர்களின் வாக்குகள் என்றால் அவர்களுக்கு அமிர்தம் போல் இனிக்கிறது. ஆனால் வன்னியர்களின் நீண்ட கால கோரிக்கையான "தனி இட ஒதுக்கீடு" கேட்டால் மட்டும் கசக்கிறது. எந்த முகத்தை வைத்துக்கொண்டு இப்படி கள்ளச்சிரிப்பு சிரித்துகொண்டு வாக்கு கேட்கிறார்கள் என்று தெரியவில்லை.
"பணம் பத்தும் செய்யும்" , "பணம் பாதாளம் வரை பாயும்" என்பது பழமொழி. அது தற்போது நிஜமாகவே உள்ளது. ஏற்காடு இடைத்தேர்தலில் பணம் நன்றாகவே விளையாடியது. இதன் மூலம் ஜனநாயகம் பாதாளத்துக்கு தள்ளப்பட்டு, அரசியல் சூதாட்டம் பணத்தை வைத்து நிறைவேறியது. அத்தனையும் ஊழல் பணம். பணம், பரிசுப்பொருள், பிரியாணி, சுண்டல், சர்க்கரை பொங்கல் கொடுத்து இது போன்று எத்தனையோ ஏமாற்று வித்தைகளை காட்டிவிட்டனர். இவ்வாறு செய்வதன் மூலம் வெற்றி பெற்றபின் அந்த தொகுதி வளர்ச்சிக்கு அவர் பாடுபடுவாரா என்பது சந்தேகம் தான்.
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், பணத்தை வைத்து வாக்குகள் வாங்கும் அரசியல் சூதாடிகளை ஒழிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லாவிடில் நல்ல கட்சிகள், படித்தவர்கள், நல்லவர்கள், நேர்மையானவர்கள் வெற்றி பெறுவது கடினமே. எனவே தேர்தலின் போது பணம் கொடுத்தது நிருபணமானால் அந்த வேட்பாளரை போட்டியிலிருந்து நீக்கும் அளவுக்கு சட்டம் வரவேண்டும்.
17 நாடாளுமன்ற தொகுதி, 100 சட்ட மன்ற தொகுதிகளில் படுத்துக்கொண்டே ஜெயிக்கும் அளவுக்கு மக்கள் சக்தி பாமக கட்சிக்கு இருந்தாலும் அது இன்று வரை நிறைவேறவில்லை. மாநிலத்தின் ஒரு பெரும்பான்மையான, ஆண்ட இனமானது இன்று வறுமை கோட்டுக்கு கீழ்தான் வாழ்கிறது. இதற்கெல்லாம் காரணமான, கடந்த 45 வருடமாக வாக்குகளை மட்டுமே வாங்கிக்கொண்டு ஏமாற்றிய இரண்டு ஊழல் கட்சிகளை மக்கள் இனிமேல் விரட்டுவதுதான் உண்மையான ஜனநாயகமாக இருக்கும். இலங்கையில் எப்படி ஒரு தனி ஈழம் தேவையோ, அதுபோல் தமிழ் மண்ணில் உள்ள ஒரு பெரும்பான்மை மைந்தர்களின் ஆட்சி வரவேண்டும்.
கருத்துரையிடுக