PMK's youtube channel
The PMK Blog
Follow Me on Twitter
வன்னியர் இணைய நண்பர்கள் முக நூல்

பாமகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: புதுச்சேரியில் பாமக போட்டி உறுதி! வேட்பாளராக ஆர்.கே.ஆர் .அனந்தராமன் அறிவிப்பு! | தர்மபுரி தொகுதியில் பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தேசிய ஜனநாயக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்! இன்று (24-03-14)12.00 பெண்ணாகரம்: 2.00 மணி பாலக்கோடு: 3.00 மணி தர்மபுரி நாளை (25-03-14) காலை 10 மணிக்கு அரூர், 12 மணி பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் நடக்கிறது. | புதுச்சேரி தொகுதியில் பாமகவை ஆதரிக்கும் தேமுதிக! | தேசிய பாதுகாப்பு சட்ட கைது ரத்து :வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு உள்ளிட்ட 20 பேருக்கு ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை! | எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் மீது பழிவாங்கும் போக்குடன் தமிழக அரசு மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்திருப்பதன் மூலம் நீதி வென்றுள்ளது- மருத்துவர் அய்யா | உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பி. சதாசிவம் அவர்களுக்கு மருத்துவர் இராமதாசு வாழ்த்து | என்.எல்.சி. பங்கு விற்பனை முடிவை கைவிட வேண்டும்: பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை! | அரிசி, காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை! –மருத்துவர் சின்னைய்யா வலியுறுத்தல்!

மார்ச் 17, 2014

வாகன சோதனையால் வணிகர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது! : மருத்துவர் அய்யா வேண்டுகோள்!!

Posted by போராளி On 3:56 PM 1 comment

இது குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் மார்ச்11 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

CD

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பண பலம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், வாக்குக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கவும் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் நோக்கமும்,  அதற்காக அதன் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளும் பாராட்டத் தக்கவை ஆகும்.
தேர்தலில் பயன்படுத்துவதற்காக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பணம் கொண்டு செல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை சுமார் ரூ. 7 கோடி ரொக்கப்பணமும், ரூ. 50 லட்சம் மதிப்புள்ள நகைகள், சேலைகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையம் நல்ல நோக்கத்துடன் தான் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது என்ற போதிலும், இந்த நடவடிக்கைகளால் அப்பாவி பொதுமக்களும், வணிகர்களும் தான் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மருத்துவச் செலவு, வீட்டு விசேஷங்கள் உள்ளிட்ட தேவைகளுக்காக பொதுமக்கள் கொண்டு செல்லும் பணமும், வணிகத்திற்கான பொருட்களை கொள்முதல் செய்ய  வணிகர்கள் கொண்டு செல்லும் பணமும் தான் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் குழந்தைக்கு கோயிலில் வைத்து காது குத்துவதற்காக சென்ற போது, அவர்களின் வாகனத்தை மறித்து சோதனை செய்த அதிகாரிகள் அவர்களிடம் இருந்த ரூ. 35 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். காதணி விழா செலவுக்காக இந்த பணத்தை கொண்டு செல்வதாக அவர்கள் கூறியதை அதிகாரிகள் ஏற்கவில்லை. இதனால் அக்குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் இதேபோல் ஏராளமான மக்களும், வணிகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய ஆவணங்கள் இன்றி இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லப்படும் பணத்தை மட்டும் தான் பறிமுதல் செய்ய வேண்டுமென ஆணையம் உத்தரவிட்டுள்ள போதிலும் அதிகாரிகள் பணம் பறிக்கும் நோக்குடன்தேவையற்ற கெடுபிடி காட்டுகின்றனர்.
ரூ. 50 ஆயிரத்திற்கும் கூடுதலான பணத்தை கொன்டு செல்லும் மக்கள் அதற்கான ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைக்காக பணத்தை திரட்டிக்கொண்டும், கடன் வாங்கிக் கொண்டும் செல்லும்போது அதற்கான ஆவணங்களை பெறுவது சாத்தியமல்ல. உண்மையாகவே தவறான நோக்கத்திற்காக பணத்தை கொண்டு செல்பவர்கள் தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி ஆதாரங்களை தயாரிக்கும் நிலையில், நடைமுறைச் சிக்கல்களால் ஆவணங்களை பெற முடியாத அப்பாவிகள் தான் பாதிக்கப் படுகிறார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளும்கட்சியான அ.தி.மு.க.வும், ஆண்ட கட்சியான தி.மு.க.வும் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே ஒவ்வொரு தொகுதிக்கும் நூற்றுக்கணக்கான கோடிகளை கொண்டு சென்று பத்திரமாக பதுக்கி வைத்து விட்டனர். அவற்றை தங்களுக்கு சாதகமான அதிகாரிகளின் துணையுடன் வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்கான திட்டங்களையும்  வகுத்துள்ளனர். இத்தகைய திட்டங்களை முறியடித்து, அவர்கள் பதுக்கி வைத்துள்ள பணத்தை பறிமுதல் செய்வதன் மூலம் தான் தேர்தலில் பண பலம் பயன்படுத்தப்படுவதையும், ஓட்டுக்கு பணம் தரப்படுவதையும் தடுக்க முடியுமே தவிர, இத்தகைய நடவடிக்கைகளால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது.
எனவே, அப்பாவி மக்களையும், வணிகர்களையும் பாதிக்கும் வகையில் வாகன சோதனை என்ற பெயரில் கெடுபிடி காட்டுவதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக சாத்தியமான, ஆக்கபூர்வமான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துவதன் மூலம் வாக்குகள் விலைக்கு வாங்கப்படுவதை தடுக்க இந்திய தேர்தல் ஆணையம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

1 comments:

தேர்தல் முழக்கங்கள்

1. தமிழகத்தின் மூன்றில் ஒரு பங்கு பெரும்பான்மை மக்களை கொண்ட வன்னியர்களின் வாக்குகளை வாங்கி, கடந்த 47 வருடங்களாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து விட்டு, வன்னியர் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி கூட தராத இரண்டு ஊழல் கட்சிகளை இந்த தேர்தலில் மக்கள் விரட்ட வேண்டும்.

2. வன்னியர்களின் கால் நூற்றாண்டு கோரிக்கையான மத்தியில் 2 சதவீதம் , மாநிலத்தில் 20 சதவீதம் இட ஒதுக்கீட்டை பெற்று தராத அந்த இரண்டு ஊழல் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

3. வன்னியர் உள்பட அனைத்து சமூகத்திற்கும் 100 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்காத அந்த இரண்டு ஊழல் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

4. சாராயத்தை, இலக்கு வைத்து விற்பனை செய்து , மக்களின் குடும்பத்தை கெடுத்து ஆட்சி செய்த அந்த இரண்டு ஊழல் கட்சிகளை மக்கள், இந்த தேர்தலில் ஒழிக்க முன் வரவேண்டும்.

5. விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த கையாலாகாத ஆட்சி நடத்தும் அந்த ஊழல் கட்சியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

6. ஒரு கோடி மக்கள் கூடிய விழாவிற்கு வந்த இருவர் மரணத்தை முதலில் விபத்து என்றும் , பிறகு கொலை என்றும் அறிவித்துவிட்டு , அதன் பின் இறந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் கூட அளிக்காத அந்த காட்டாட்சிக்கு மக்கள் முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.

7. இருவர் சாவுக்கு நீதி ,நியாயம் கேட்க போராடிய கட்சியின் நிறுவனர் முதல் தொண்டர் வரை அனைவரையும் சிறையில் அடைத்து கொடுமை படுத்திய அந்த கொடுங்கோல் ஆட்சிக்கு மக்கள் இந்த தேர்தலில் தண்டனை தரவேண்டும்.

8. ஊழல் பணத்தை மக்களிடம் கொடுத்து வாக்கு சேகரிக்கும் அந்த இரண்டு ஊழல் கட்சிகளை இந்த தேர்தலோடு முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

9. வன்னியர்கள் உட்பட அனைத்து சமூக மக்கள் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க ஓடோடி வரும் மக்கள் நல கட்சிக்கு மக்கள் வாக்கு அளிக்க முன் வர வேண்டும்.

10. ஏழை மக்களின் கண்ணீரை , பிரச்சினைகளை, உரிமைகளை தீர்க்காமல் ஆடம்பர ஆட்சி நடத்தும் அந்த கட்சியை மக்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும்.

11. "ஊழலின் ஊற்றுக்கண்", "விஞ்ஞான ஊழல்" , "குடும்பமே ஊழல்", "ஊழல் ராணி", " ஒரு ருபாய் சம்பளம்" போன்ற பட்டங்களை வாங்கி, மக்களை முட்டாள் ஆக்கிய இரண்டு ஊழல் கட்சிகளுக்கு, மக்கள் இந்த தேர்தலில் கரியை பூச வேண்டும்.

12. மக்களின் உரிமை பிரச்சினையான "தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு" கொண்டு வர கையாலாகாத ஆட்சி நடத்திய அந்த இரண்டு ஊழல் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

13. வேளாண்மைக்கு உருப்படியான ஒரு நல்ல திட்டத்தை கூட கொண்டு வராமல், தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து கள்ளச்சிரிப்பு சிரித்துகொண்டு வாக்கு கேட்க வரும் அந்த இரண்டு ஊழல் கட்சிகளை "எந்த முகத்தை வைத்துகொண்டு வாக்கு கேட்கிறாய்" என்று சொல்லி மக்கள் விரட்ட வேண்டும்.

14. இத்தனை வருடங்களாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரண்டு ஊழல் கட்சிகள் வெறும் "வெற்று வாக்குறுதி" கொடுத்து ஏமாற்றியதை மக்கள் உணரவேண்டும்.

15. வன்னியர்கள் உட்பட அந்த பகுதியில் வாழும் அனைத்து சமூக மக்களும் "ஊழல் மற்றும் சீர்கேடு அடைய செய்த பெருச்சாளிக்கு வாக்கு இல்லை" என்று சொல்ல வேண்டும்.